பட்டையை கிளப்பும் ஏறுதழுவல்... நாட்டு மாடுகள் பவனி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோக்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் எது குறைவானதோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது.
Avaniyapuram jallikattu viral video : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக கவனத்தை பெற்று வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் களத்தில் இருந்து தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக சில எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களும் வீடியோக்களும்
ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடத்தப்படும். தற்போது அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் எது குறைவானதோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil