ச்ச்சோ ஸ்வீட்ட்ட்ட் சொல்ல வைக்கும் சிறுத்தை - நாய்க்குட்டி நட்பு! வைரலாகும் புகைப்படங்கள்

இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aww-dorable friendship between cheetah cub and dog

aww-dorable friendship between cheetah cub and dog

aww-dorable friendship between cheetah cub and dog : சின்சினாட்டி மாகாணத்தில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டனில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகள் என்றால் மக்களுக்கு ஒரு விருப்பம் தான். அத்தனை அழகாகவும் அக்கறையாகவும் வளர்க்கப்பட்டுவரும் மிருகங்களுக்காக அங்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது அங்கு வளர்ந்து வரும் சிறுத்தை மற்றும் நாய் குட்டியின் ஆத்மார்த்தமான நட்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சின்சினாட்டி வன உயிரியல் காப்பகத்தின் மஸ்ட் ஃபார்ம் ப்ரீடிங்க் சென்ட்டரில் கிரிஷ் என்ற சிறுத்தை இந்த வருடத்தின் துவக்கத்தில் பிறந்தது. சில நேரங்களில் தனியாக பிறக்கும் சிறுத்தைகள் உயிருடன் இருப்பது சவாலான காரியமாக இருக்கிறது. இதனை உணர்ந்த காப்பாளர்கள் அந்த சிறுத்தைக்கு நண்பனாக ரீமஸ் என்ற நாயை அறிமுகம் செய்தனர்.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இந்த இரண்டு உயிரினங்களும் ஒருவர் மீது ஒருவர் பொழியும் அன்பைப் பார்த்து வியந்த காப்பாளர்கள் அந்த இரண்டு குட்டி உயிரினங்களின் வீடியோக்களை ஆன்லைனில் ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

சின்சினாட்டி உயிரியல் பூங்கா தொடர்ந்து கிரிஸ் மற்றும் ரீமஸின் புகைப்படங்களை தங்களின் முகநூல் பக்கங்களில் பதிவு செய்து வருகிறது. இதை பார்க்கவும் க்யூட்னெஸ் ஓவர்லோடட் என்று நெட்டிசன்கள் ஆச்சரியம் காட்டாமலும் இல்லை.

சிறுத்தையின் ட்ரெய்னர்களுடன் சிறுத்தை எவ்வாறு பழக வேண்டும் என்பதற்காக நாங்கள் ட்ரெய்னிங் தந்து வருகின்றோம். இந்த நாய்க்குட்டியுடன் கிரிஷ் இருக்கும் போது நன்றாக இருக்கிறது. ஆனால் சிறுத்தை நன்றாக வளர்ச்சி அடைந்த நேரத்தில் இது எப்படி இருக்கும் என்பதை நம்மால் உறுதியாக கூற இயலாது. சிறுத்தைகளுடன் நாய்கள், மனிதர்களை விட மிக நன்றாக பழகும் என்பதால் ரீமஸை கிரிஸூடன் பழக விட்டிருக்கின்றோம் என்று காப்பகம் அறிவித்துள்ளது.

View this post on Instagram

Territorial bed battle. Can you relate?

A post shared by Cincinnati Zoo (@cincinnatizoo) on

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: