யானை மீது அமர்ந்து யோகா செய்த பாபா ராம்தேவ்: கீழே விழுந்ததால் பரபரப்பு

மதுராவின் மகாவனில் அமைந்துள்ள  குருசரண்  ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா  செய்தார்.

மதுராவின் மகாவனில் அமைந்துள்ள  குருசரண்  ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா  செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

முன்னதாக, யோகா குரு பாபா ராம்தேவ் கோவிட்-19 ஐ குணப்படுத்தும் முதல் ஆயுர்வேத மருந்துகள் என்று அறிமுகப்படுத்தினர். இருப்பினும், சில மணிநேரங்களிலேயே , ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் மருந்துகளின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும், கொரோனா குணப்படுத்தும்  மருந்து என்ற பெயரில் விளம்பரப்படுத்துவம் தடை விதித்தது.

 

 

யோகா வையும், தியானத்தையும் யானையின் மேலமர்ந்து செய்தால்தான் பலனுண்டு என்று எங்கும் சொல்லவில்லை   என்று ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Baba ramdev fell off from an elephant while doing yoga

Next Story
அப்படி என்ன தவறாக இருக்கிறது அந்த விளம்பரத்தில்? ட்ரோல்களால் நொந்து போன தனிஷ்க்!Boycott Tanishq trolls made Tanishq to pull the Ekatvam ad from youtube
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com