Baba Ramdev shared a photo of a baby Elephant doing Yoga : சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் முதற்கொண்டு அனைவரும் நேற்று யோகா செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து யோகாவின் தேவை மற்றும் நன்மைகள் குறித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில் பாபா ராம்தேவ் நேற்று ஒரு புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எப்போதும் தன்னுடைய யோக கலையை மட்டுமே புகைப்படங்களாக வெளியிடும் அவரின் இந்த புகைப்படம் அனைவரையும் வாவ் சொல்ல வைத்ததுள்ளது.
#योगमय_देवभूमि #योगमय_हरियाणा#IYD_पतंजलि pic.twitter.com/xtzcAwnMkh
— स्वामी रामदेव (@yogrishiramdev) June 21, 2020
யானை குட்டி ஒன்று தன்னுடைய முன்னங்கால்களை ஸ்ட்ரெச் செய்யும் அந்த காட்சி பார்ப்பதற்கு யானை யோகா செய்வது போன்றே இருக்கிறது. இந்த புகைப்படத்தை ஷேர் செய்த கொஞ்ச நேரத்திலேயே 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 2000 ரீட்வீட்களை பெற்றது.
பாபா ராம்தேவ் மட்டும் யானையை வைத்து சர்வதேச யோகா தினத்திற்கு வாழ்த்துகள் கூறவில்லை. ஐ.எஃப்.எஸ். அதிகாரி வைபவ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இன்று தான் யோகா குரு” என்ற கேப்சனுடன் யானைகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
I am the #yoga guru for the day !! PC:SM #Internationalyogaday2020 @susantananda3 @verma_akash @upasana_ganguly @banjoyifs @DigvijayKhati @thetoonguy @kundan_ifs @SudhaRamenIFS @deespeak @anmol_mussoorie @DSWFWildlife pic.twitter.com/8yxIEJW99O
— Vaibhav Singh,IFS (@VaibhavSinghIFS) June 21, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Baba ramdev shared a photo of a baby elephant doing yoga
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி