/indian-express-tamil/media/media_files/2025/10/29/baby-elephant-dance-2025-10-29-15-48-25.jpg)
அஸ்ஸாமின் மிகவும் செல்வாக்கு மிக்க இசைக் கலைஞர்களில் ஒருவாரான சுபின் கார்க் சிங்கப்பூரில் 52 வயதில் காலமானார். Photograph: (Image Source: @guwahati.unofficial/Instagram)
அஸ்ஸாமின் மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவரான சுபின் கார்க், சிங்கப்பூரில் நீச்சல் தொடர்பான ஒரு சம்பவத்தில் காலமானார். கார்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்களின் பல வீடியோக்கள் மத்தியிலும், டெர்கானில் உள்ள ஜெலெஹுவான் என்ற கிராமத்தில் அவரது பாடல்களில் ஒன்றுக்கு நடனமாடும் ஒரு யானைக் கன்றின் கிளிப் இணையத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், குட்டி யானை கார்க்கின் ஆத்மார்த்தமான பாடல் ஒலிக்கும்போது, தன் துதிக்கையை ஆட்டி, தாளத்திற்கு ஏற்றவாறு அசைவுகளை வெளிப்படுத்துகிறது. அந்த விலங்கின் அசைவுகளுக்கும் பாடலின் தாளத்திற்கும் இடையேயான இயற்கையான ஒருங்கிணைப்பு உள்ளூர்வாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டguwahati.unofficial @guwahati.unofficial) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சுபின் தா, நீங்கள் எப்போதும் நினைவில் இருப்பீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாகப் பரவி, ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும், பகிர்வுகளையும், கருத்துகளையும் (பெற்றது. “மிஸ் யூ சுபின் தா. தயவுசெய்து மீண்டும் வாருங்கள்” என்று ஒரு ரசிகர் எழுதினார். “சுபின் தா, உங்களை மிஸ் செய்கிறோம்” என்று மற்றொரு ரசிகர் கருத்து தெரிவித்தார்.
“சுபின் தாவுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.
“யா அலி, ஜானே க்யா” போன்ற பாலிவுட் பாடல்களுக்கு குரல் கொடுத்த சுபின் கார்க், சிங்கப்பூரில் 52 வயதில் காலமானார். அவர் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த வடகிழக்கு இந்திய விழாவுக்கான கலாச்சார தூதுவராகப் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தார். செப்டம்பர் 19-ம் தேதி, அசாம் சங்கம் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் அவரை ஒரு படகு சவாரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது அவர் நீச்சலடிக்கும்போது சுயநினைவை இழந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரிக்க சி.ஐ.டி-ன் கீழ் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டது. சுபின் கார்க்கின் குடும்பத்தினரும் ஒரு முழுமையான விசாரணை கோரி சி.ஐ.டி-யில் தனி புகார் ஒன்றை பதிவு செய்தனர். அக்டோபர் 1-ம் தேதி, விழா அமைப்பாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோரை டெல்லி விமான நிலையம் மற்றும் குருகிராமில் இருந்து அசாம் காவல்துறை கைது செய்து விசாரணைக்காக குவஹாத்திக்கு அழைத்து வந்தது.
பின்னர், சுபின் கார்க்கின் இசைக்குழுவில் இருந்த ஷேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் இணைப் பாடகி அம்ரித்பிரபா மஹந்தா ஆகியோரையும் காவல்துறை கைது செய்தது. குவஹாத்தியில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் (சி.ஜே.எம்) நீதிமன்றம் கோஸ்வாமி மற்றும் மஹந்தா இருவரையும் 14 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பியது.
இதற்கிடையில், இந்த மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று தி சென்டினல் செய்தி வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us