மசினக்குடியில் எஸ்.ஐ. யானையின் மரணம் நம் அனைவரையும் மிகுந்த வருத்ததிற்கு உள்ளாக்கியது. அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த ஹோம் ஸ்டேவை மூடிய பின்னர், விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் தங்களின் வேண்டுகோள்களை முன்வைத்தனர். யானை ப்ரியர்களின் மனதை உற்சாகப்படுத்த இந்த செய்தி உங்களுக்காக.
அமெரிக்காவின் டக்ஸானில் செயல்பட்டு வருகிறது ரெய்ட் பார்க் ஸூ என்ற விலங்கியல் பூங்கா. 1965ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பூங்கா நூற்றக்காணக்கான விலங்குகளுக்கு புகலிடமாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த ஸூவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், பென்ஸி என்ற குட்டி யானை கொட்டும் பனியில் சறுக்கி விளையாடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நாளை இதற்கு மேல் யாராலும் அழகாக்கிவிட இயலாது என்பதையே இந்த யானை நமக்கு நினைவூட்டுவதாக தோன்றுகிறது.
ஆரம்பத்தில் பென்ஸிக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ள பின்பு பென்ஸியின் சகோதரி நந்தியும் இந்த அழகான விளையாட்டில் கலந்து கொண்டு இருவரும் மாறி மாறி சேற்றில் புரண்டு எழுந்து பனிப்பொழிவை வரவேற்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil