தாய் யானையிடம் இருந்து பிரிந்த குட்டி யானை... உதவி கேட்டு மனிதர்களிடம் ஓடி வந்த நெகிழ்ச்சி: வைரல் வீடியோ

தாய் யானை தன் குட்டியை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ளும் வகையில், வனத்துறை அதிகாரி ஒருவர் தாய் யானையின் சாணத்தை குட்டியின் தும்பிக்கையிலும் கால்களிலும் மெதுவாகத் தேய்த்தார்.

தாய் யானை தன் குட்டியை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ளும் வகையில், வனத்துறை அதிகாரி ஒருவர் தாய் யானையின் சாணத்தை குட்டியின் தும்பிக்கையிலும் கால்களிலும் மெதுவாகத் தேய்த்தார்.

author-image
WebDesk
New Update
Lost elephant calf video

கிளம்பும் முன், "நன்றி" சொல்வது போல் குட்டி யானை மெதுவாகப் பிளிறுகிறது. Photograph: (Image Source: @susantananda3/X)

அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில், வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் குட்டி யானை ஒன்று அதன் தாயுடன் மீண்டும் இணைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓய்வுபெற்ற இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோ, ஒரு வனத்துறை வாகனத்தை நோக்கி ஓடிவந்து உதவி கேட்கும் குட்டியின் உணர்ச்சிகரமான காட்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், பயந்து குழம்பிய நிலையில் இருந்த குட்டி யானை, தனது தாயைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாகனத்தைச் சுற்றிச்சுற்றி வந்து, மோப்பம் பிடித்து, அங்கும் இங்கும் அலைகிறது. இதையடுத்து, வனத்துறை குழுவினர் அந்தக் குட்டி யானையை அதன் தாய் கடைசியாகப் பார்க்கப்பட்ட பகுதிக்கு கவனமாக அழைத்துச் செல்கின்றனர். தாய் யானை தன் குட்டியை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ளும் வகையில், அதிகாரிகள் ஒருவர் தாய் யானையின் சாணத்தை குட்டியின் தும்பிக்கையிலும் கால்களிலும் மெதுவாகத் தேய்த்தார்.

கிளம்பும் முன், "நன்றி" சொல்வது போல் குட்டி யானை மெதுவாகப் பிளிறுகிறது. அது மீண்டும் காட்டுக்குள் நடக்கத் தொடங்கியதும், ஒரு அதிகாரி "ஹாங், ஜா. ஜா, ஜா, ஜா (போ, போ, போ)" என்று கூறி அதை ஊக்குவிக்கிறார். குட்டி யானை அதன் தாயின் அருகில் நடந்து செல்வதுடன் வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த நந்தா, "காசிரங்காவில் சோட்டு அதன் தாயிடம் இருந்து பிரிந்துவிட்டது. பின்னர் அது அதன் தாயுடன் இணைக்கப்பட்டது. மனித வாசனையை மறைக்க வனத்துறை அதிகாரிகள் தாய் யானையின் சாணத்தை குட்டி மீது தடவினார்கள். இறுதியில் மகிழ்ச்சியான மறு இணைப்பு" என்று எழுதியுள்ளார்.

வைரலான வீடியோவைப் இங்கே பாருங்கள்:

Advertisment
Advertisements

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான இதயங்களைத் தொட்டதால், விரைவாகப் பலரின் கவனத்தை ஈர்த்தது. "என்ன ஒரு அழகான வீடியோ. காசிரங்கா வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அழகானது. குறைவான மனிதக் குடியிருப்புகளுடனும், வணிகமயமாக்கல் இல்லாமலும் அதை அப்படித்தான் பராமரிக்க வேண்டும்" என்று ஒரு பயனர் எழுதினார். "ஓலே பாபா, எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் காசிரங்கா அருகே வளர்ந்ததற்குப் பெரும் அதிர்ஷ்டசாலி. எங்கள் தோட்டத்தில் (தேயிலைத் தோட்டம், லோகோஜன்) ஒரு கருஞ்சிறுத்தை பல நாட்களாக இருந்தது. அந்த நாட்கள் மிகவும் சிறப்பானவை. தற்காலிகமாக இருந்தாலும், இயற்கையின் மடியில் என்னைப் படைத்த கடவுளுக்கு நன்றி. நூமாலிகரிலும் நிறைய யானைகள் உள்ளன" என்று மற்றொரு பயனர் கருத்துத் தெரிவித்தார்.

"ஓ இது ஒரு அழகான கதை. நன்றி" என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: