தமிழ்நாடு தெப்பக்காடு யானைகள் முகாமில் காலையில் குட்டி யானைகள் நடைபயிற்சி செல்லும் வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குட்டி யானைகள் வாக்கிங் செல்லும் வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: IAS officer shares video of baby elephants on morning walk in Tamil Nadu elephant camp
தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமை செயலாளரும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, தமிழகத்தின் வனவிலங்குகளைக் காட்டும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், இந்த முறை, தமிழ்நாட்டின் தெப்பக்காடு யானைகள் முகாமில் காலையில் நடைப்பயிற்சி செல்லும் குட்டி யானைகளைப் படம்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Elephant babies taking a morning walk with their loving Mahouts at Theppakadu elephant Camp in Tamil Nadu. The camp is taking care of three calves found abandoned/orphaned recently. Baby elephants are too young ( 4-5 months) and hence very vulnerable without the immunity of… pic.twitter.com/rIH8AyOrfp
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 23, 2024
இந்த வீடியோவில், தெப்பக்காடு யானைகள் முகாமில், மரக்கட்டையால் வேலி அமைக்கப்பட்ட பகுதியில் 3 குட்டி யாணைகளை யானைப்பாகன்கள் நடைபயிற்சி அழைத்துச் செல்கின்றனர். குட்டி யானைகள் உற்சாகமாக வேகமாக ஓட்டமும் நடையுமா நடைபயிற்சி செல்கின்றன. க்யூட்டான யானைக் குட்டிகள் நடைபயிற்சி செல்வது பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த மூன்று குட்டி யானைகளும் காலையில் 5 யானைப் பாகன்களுடன் நடந்து செல்கின்றன. இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “சமீபத்தில் கைவிடப்பட்ட/அனாதையாகக் காணப்பட்ட இந்த மூன்று யானைக் குட்டிகளை முகாம் கவனித்து வருகிறது. குட்டி யானைகள் மிகவும் இளமையாக உள்ளன (4-5 மாதங்கள்) எனவே தாயின் பால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் மிகவும் பாதிக்கப்படும். எங்களிடம் 24*7 பராமரிப்பை வழங்குவதற்கு ஏழு அர்ப்பணிப்புள்ள காவலர்கள் உள்ளனர், அவர்கள் யானைக் குட்டிகளை தங்கள் சொந்த குழந்தைகளாக பாவித்து கவனித்து வருகின்றனர்.” என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த யானைகளை பராமரிப்பதில், தமிழக அரசின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு, உள்ளூர் குழு மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு அறிவியல் மேலாண்மைக்காக உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது என்று அவருடைய பதிவு தொடர்ந்து விளக்குகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ஒரு எக்ஸ் பயனர், “அருமையான முயற்சி... சிறப்பானது” என்று கம்மெண்ட் செய்துள்ளார். இரண்டாவது பயனர், “காலையில் பார்க்க மிகவும் இனிமையான விஷயம்...” என்று கருத்து தெரிவித்துள்ளார்.மூன்றாவது பயனர், “அரசு மற்றும் ஊழியர்களின் சிறப்பான முயற்சி, தயவுசெய்து இந்த சிறந்த வேலையைச் செய்யுங்கள்…” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “அந்த குட்டிகளைக் கட்டிப்பிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு ரத்தினமாகும். இது அமைதியான முதுமலை தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது. அங்கு நீங்கள் யானைகளை அருகில் காணலாம். அவைகள் தங்கள் வேலைகளைச் செய்வதையும், அவைகளுக்கு உணவளிப்பதையும் குளிப்பாட்டுவதையும் நீங்கள் பார்க்கலாம், இவை அனைத்தும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் நடக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.