Advertisment

"பேபி ஃபைவ் ஆஃப் மது"வுக்கு பள்ளி அட்மிஷன் கிடைத்தது.. முதல்வர் யோகி அலுவலகம் நடவடிக்கை!

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் படம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து முதல்வர் அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவு வந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhar card

Baby Five of Madhu gets school admission after CM yogi office intervenes

ஆதார் அட்டையில் ஏற்பட்ட அசாதாரண தவறு காரணமாக உத்தரபிரதேச பள்ளி ஒன்றில் சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆதாரில் சிறுமியின் பெயர் "பேபி ஃபைவ் ஆஃப் மது" (Baby Five of Madhu) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பல்வேறு விமர்னசங்களை கிளப்பியது. இந்நிலையில், ஒரு மாதம் கழித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தலையிட்டதையடுத்து, சிறுமிக்கு பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் படம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து முதல்வர் அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவு வந்தது.

ANI அறிக்கையின்படி, குழந்தை தனது பெற்றோரின் விருப்பத்தின்படி ஆர்த்தி என்ற பெயரில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டாள். அவரது ஆதார் அட்டை திருத்தம் செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தாய் மது, செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “எனது மகளை அரசுப் பள்ளியில் சேர்க்கச் சென்றேன். எனது மகளின் ஆதார் அட்டையில் அவள் எனக்கு ஐந்தாவது குழந்தை என்று எழுதியிருந்ததால், அவளை பள்ளியில் சேர்க்க முடியாது என ஆசிரியர் கேலி செய்தார். மார்ச் 2ம் தேதி சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் ஆர்த்தியின் தந்தை ஊடகங்களிடம் கூறுகையில், அவர் கல்வியறிவு இல்லாதவர் என்பதால், ஆதார் அட்டையில் தனது குழந்தையின் பெயர் தவறாக எழுதப்பட்டிருப்பது தனக்குத் தெரியாது என்று கூறினார்.

சம்பவம் நடந்த படவுன் மாவட்ட மாஜிஸ்திரேட் தீபா ரஞ்சன், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. கவனக்குறைவால் தவறு நடந்துள்ளது. வங்கி மற்றும் தபால் நிலைய அதிகாரிகளை நாங்கள் எச்சரிப்போம், இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment