New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1751.jpg)
baby immediate dance after sleep baby shark song - ட்விட்டரில் மட்டும் 7.6 மில்லியன் பார்வை பெற்ற வைரல் வீடியோ! அப்படி அந்த குழந்தை என்ன செய்தது தெரியுமா?
படுக்கையறையில் இருந்து நமது பெயர் உச்சரிக்கப்படும் போது, என்ன படிக்கிறோம் என்று கூட தெரியாமல் சத்தமாக உளறிக் கொண்டிருப்போம்
baby immediate dance after sleep baby shark song - ட்விட்டரில் மட்டும் 7.6 மில்லியன் பார்வை பெற்ற வைரல் வீடியோ! அப்படி அந்த குழந்தை என்ன செய்தது தெரியுமா?
படிக்கும் காலத்தில் வகுப்பு நேரத்தில் தூங்கி வழியாமல் எவரும் இருந்திருக்க மாட்டோம். பாடம் எடுப்பவர் போர்டு பக்கம் திரும்பும் அடுத்த நொடி நம் கண்கள் மூடும், அவர் திரும்பும் அடுத்த நொடி கண்கள் திறக்கும். இப்படியாகவே இன்ஸ்டால்மென்ட் மோடில் தூங்கிக் கொண்டிருப்போம். இது ஒரு வகை என்றால், இன்னொரு வகை இருக்கிறது. கண்களை திறந்து வைத்துக் கொண்டே தூங்குவது. ஜென் நிலையை அடைந்தவர்களால் தான் அப்படியெல்லாம் தூங்க முடியும். இது வகுப்பு கலாட்டா.
இப்போ வீட்டுக்கு வருவோம்... எக்ஸாம் நேரங்களில் அதிகாலை நம்மை எழுப்பி விட்டுவிடுவார்கள். உரக்க படிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். அப்போது தான், நாம் தூங்கவில்லை என்று அவர்கள் நம்புவார்களாம். நாம், முகம் கழுவிய முதல் 15 நிமிடம் சத்தம் போட்டு படித்துவிட்டு, அப்படியே தூங்கி விழுவோம்... படுக்கையறையில் இருந்து நமது பெயர் உச்சரிக்கப்படும் போது, டக்குனு கண் விழித்து என்ன படிக்கிறோம் என்று கூட தெரியாமல் சத்தமாக உளறிக் கொண்டிருப்போம்.
சரி, இதெல்லாம் நாம் தான் செய்திருக்கிறோம் என்று பார்த்தால், இங்கே குழந்தை ஒன்று நம்மையே மிஞ்சி விடும் போல... எப்படியும், 3 - 3.5 வயது தான் இருக்கும். இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஏற்ப, இவ்வளவு சிறிய வயதிலேயே தன்னை எப்படி செதுக்கி வைத்திருக்கிறான் என்று பாருங்கள்,
true fan of baby shark pic.twitter.com/uD6EX2v1Pa
— Adriana ???? (@Adriana_Derath) August 18, 2019
இந்த வீடியோ ட்விட்டரில் மட்டும் இதுவரை 7.6 மில்லியன் பார்வைகள் பெற்று வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.