உத்தரபிரதேசம் மதுராவில், தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Advertisment
உயிர் தப்பிய அதிசய குழந்தை:
இந்தியாவில் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவனக்குறை, செல்பி ஆர்வம், ஆபத்தான பயணம் என பல காரணங்கள் ரயிலில் மோதி பொதுமக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தண்டவாளத்தில் தவறி விழுந்தும் அதிர்ஷடவசமாக உயிர்பிழைத்த குழந்தை அனைவரையும் ஆனந்த கண்ணீரில் திளைக்க வைத்துள்ளது.
மதுரா ரயில் நிலையத்தில் பணப்பை காணாமற்போன காரணத்தால் சோனு குடும்பத்தினர் ரயிலிலிருந்து கீழே இறங்கினர். நகரும் ரயிலிலிருந்து இறங்கும்போது குழந்தை தாயாரின் கையிலிருந்து குழந்தை நழுவி தண்டவாளத்தில் விழுந்தது.
இதனால், அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயில் உடனே புறப்பட்ட காரணத்தினால் குழந்தையை தூக்க முடியவில்லை. ரயில் சென்ற பிறகு பார்த்தபோது,தண்டவாளத்தில் விழுந்த குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்த காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அழுதுக் கொண்டே கூறுகையில், ”குழந்தை மடியில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தது. நாங்கள் அலறியடுத்துக் கொண்டு பார்த்தபோது ரயில் நகர தொடங்கி விட்டது.
தண்டவாளத்திற்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் உள்ள பகுதியில் குழந்தை சிக்கியிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடவுளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிழைத்ததை கண்ட பெற்றோரும் அங்கிருந்த பயணிகளும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியடைந்தனர்