viral video: வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட தாய் காண்டாமிருகம் இறந்துவிட்டது என அறியாத அதன் குட்டி, தாயை எழுப்பப் போராடும் இதயத்தை நொறுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை வகுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும், இன்னும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது தொடரத்தான் செய்கிறது. வனவிலங்குகள் இறைச்சிக்காகவும், தோல், எலும்பு, தந்தம், பல் ஆகியவற்றுக்காக வேட்டைகள் தொடர்கிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் வனவிலங்குகளின் பாதுகாவலராக உணர வேண்டும் அப்போதுதான் வனவிலங்குகள் வேட்டையை இல்லாமல் ஆக்க முடியும்.
தாய் விலங்குகள் கொல்லப்படுவதால், அதன் குட்டிகளும் ஆதரவு இல்லாமல் அழிந்துபோகும் நிலை ஏற்படும். அதன் துயரம் பெரிய துயரம்தான். வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட தாய் காண்டாமிருகம் இறந்தது தெரியாமல், அதன் குட்டி தாயை எழுப்பப் போராடும் இதயத்தை நொறுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “இந்த வீடியோ என்னை உடைத்துப் போட்டுவிட்டது. வேட்டையாடுபவர்களால் கொம்புக்காக கொல்லப்பட்ட தாய் காண்டாமிருகத்தை அதன் குட்டி தனது தாயை எழுப்ப முயற்சி செய்கிறது.
வியட்நாம் மற்றும் சீனாவில் காண்டாமிருக கொம்புக்கான தேவை, எஞ்சியிருக்கும் காண்டாமிருகங்களை அழிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள், அதன் கொம்புகளை வைத்துக்கொள்வது பற்றிய கதைகள் எல்லாம் நமது கற்பனை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த வீடியோவில், வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட தாய் காண்டாமிருகம் இறந்துவிட்டது என்பதை அறியாத அதன் குட்டி தாயை எழுப்ப சுற்றி சுற்றி வந்து முயற்சி செய்கிறது. இந்தக் காட்சியை பார்க்கும்போதே இதயத்தை நொறுக்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"