டயர்கள் கிடையாது..படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்; உலகின் மிகச்சிறிய கார் இதுதான்!

டயர்களே இல்லாமல் ஓடும் கார் ஒன்று சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காரில் டயர்கள் இல்லை. தரையில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று செல்கிறது. உலகின் மிகச்சிறிய கார் என்று இதனை நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.

டயர்களே இல்லாமல் ஓடும் கார் ஒன்று சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காரில் டயர்கள் இல்லை. தரையில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று செல்கிறது. உலகின் மிகச்சிறிய கார் என்று இதனை நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Banana Peel Car

டயர்கள் கிடையாது... படுத்துக் கொண்டே ஓட்டும் டிரைவர்; உலகின் மிகச்சிறிய கார் இதுதான்!

டயர்களே இல்லாமல் ஓடும் கார் ஒன்று சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காரில் டயர்கள் இல்லை. தரையில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று செல்கிறது. உலகின் மிகச்சிறிய காரை தைவான் உருவாக்கியுள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு வாழைப்பழ தோல் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்த காரை பனானா பீல் கார் என அழைக்கின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் இந்த கார் வைரலாகி வருகிறது. இந்த கார் ஸ்டான்ஸ் கராஜ் தைவான் (Stance Garage Taiwan ) குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment
வீடியோவில்  காரின் மேல் பகுதி தெரியும்படி உள்ளது. ஆனால் கண்ணாடியின் கீழ் பகுதி, என்ஜின் இருக்கும் முன் பானட் மற்றும் லக்கேஜ்கள் வைக்கப்பட்டுள்ள பின் பகுதி அனைத்தும் காணவில்லை. அதுமட்டுமின்றி, இந்த கார் டயர் இல்லாமல் கூட இயங்கும் திறன் கொண்டது. இந்த காரை மக்கள் சுற்றி நின்று பார்த்து வீடியோ எடுத்தனர். 
Advertisment
Advertisements

இந்த காரை ஓட்ட, டிரைவர் வழக்கமான இருக்கையில் அமர முடியாது. அவர் முழுமையாக படுத்த நிலையில் கேமராக்களின் உதவியால் வாகனத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதில், வழக்கமான கார்களில் இருக்கும் ஸ்டியரிங் அல்லது பெடல்ஸ் எதுவும் இருக்காது. தரையுடன் சில மில்லிமீட்டர் உயரத்தில் மட்டும் ஓடக்கூடிய இந்த வாகனம், வீடியோ கேம்களில் பார்ப்பதுபோல இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த காரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் சிலர் இந்த கார்ல எப்படி உட்காருவது? டிரைவர் நிச்சயம் 2 – 3 அடி உயரம்தான் இருப்பார். பாதி தான் இருக்கு மீதி எங்க என்பது போல தங்களது ஆச்சரியங்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டு, இத்தாலியில் உள்ள கார்மேகெடான்( Carmagheddon)  நிறுவனம், ஃபியாட் பாண்டா காரை  உலகின் மிகக் குறைந்த உயரம் கொண்ட காராக மாற்றியமைத்தது. அது கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டில் இடம்பெற்றது. ஆனால் தற்போது, பனானா பீல் காரின் வடிவமைப்பு அதை விட குறைந்த காராக மக்களால் அடையாளம் காணப்படுகிறது. வழக்கமான பயன்பாடுகளுக்கா இந்த கார் வடிவமைக்கப்படவில்லை எனவும், மக்களின் பார்வைக்காக ஒரு முன் மாதிரி காராக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: