பெங்களூருவில் புறா கூண்டு போல ஒரு சின்ன அறை; வாடகை கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்: வைரல் வீடியோ

பெங்களூருவில் புறா கூண்டு போல ஒரு சின்ன அறைக்கு வாடகை இவ்வளவு என்று இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Room rent

போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் ஐ.டி. நகரமான பெங்களூரு இப்போது, குறுகலான ஒரு சிறிய அறைக்கு அதிக வாடகைக்கும் பெயர் பெற்றுள்ளது.

பெங்களூருவில் புறா கூண்டு போல ஒரு சின்ன அறைக்கு வாடகை இவ்வளவு என்று இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisment

போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் ஐ.டி. நகரமான பெங்களூரு இப்போது, குறுகலான ஒரு சிறிய அறைக்கு அதிக வாடகைக்கும் பெயர் பெற்றுள்ளது. ஆம், பெங்களூருவில், ஒரு சிறிய அறையின் வாடகை நெட்டிசன்களை மலைக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் அபிஷேக் சிங் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் தான் பெங்களூருவில் வசிக்கும் அறையின் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். 

ஒருவர் அந்த அறையில் நடுவில் நின்று இரண்டு கைகளை நீட்டலாம், படுத்துக்கொண்டு கால்களை நீட்டலாம். இவ்வளவு குறுகலான சிறிய அறைக்கு வாடகை 25 ஆயிரம் ரூபாய் வாடகை என்று அபிஷேக் சிங் தெரிவித்துள்ளது பலரையும் அதிச்சி அடைய வைத்துள்ளது. ஒரு சின்ன அறைக்கு இவ்வளவு வாடகையா என்று பலரும் வாயடைத்துப் போயுள்ளார்கள்.

Advertisment
Advertisements

விலைவாசி உயர்வு ஒரு பக்கம் வானத்தை தாண்டி பறந்துகொண்டிருக்கிறது என்றால், மறுபக்கம் வீட்டு வாடகை விண்ணை முட்டி நிற்கிறது. பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் புறா கூண்டு போல இருக்கும் ஒரு அறையின் வாடகையே இவ்வளவு என்றால், சாமனிய மக்கள் சொந்த வீடு வாங்குவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது போல இருக்கிறது.

அதே நேரத்தில், இந்த வீடியோவை வெளியிட்ட அபிஷேக் சிங் ஒரு பொறுப்பு துறப்பையும் போட்டிருக்கிறார். அதில், “இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே. குறிப்பிடப்பட்டுள்ள வாடகைத் தொகை இந்த பிளாட்டின் சரியான விலையைப் பிரதிபலிக்காமல் போகலாம். ஆனால், முக்கிய நகரப் பகுதிகளில் அதிக வாடகையின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே, நகைச்சுவையை அனுபவியுங்கள், அதை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள், சிரித்துக் கொண்டே இருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: