கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வீடு திரும்பிய பெண் மருத்துவர் ஒருவருக்கு உரத்த ஆரவாரத்துடனும், கைதட்டலுடனும் வரவேற்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர் விஜயஸ்ரீ பெங்களூரில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிப்பவர்.எம்.எஸ்.ராமையா நினைவு மருத்துவமனையில் பணிபுரியும் இவருக்கு வழங்கப்பட்ட ஆரவாரத்தை நினைத்து முதலில் கைகளால் சைகை செய்தார். ஆனால், கண்களில் மறைந்திருந்த அடிமட்ட கண்ணீர் வெளிவந்தது. அக்கம் பக்கத்தினரின் கைதட்டலுக்கு மத்தியில் உண்மையில் அந்த மருத்துவர் செய்வதரியாது நின்றார்.
ಕಣ್ಣಿಗೆ ಕಾಣುವ ದೇವರು!
Dr. Vijayashree of Bengaluru received a heroic welcome when she returned home after tending to #COVID19 patients in MS Ramaiah Memorial Hospital.
A big thank you to all the #CoronaWarriors working selflessly on the frontline of this pandemic. We SALUTE you! pic.twitter.com/COHT4KYYE1
— M Goutham Kumar (@BBMP_MAYOR) May 2, 2020
பெங்களூரு மேயர் எம். கவுதம் குமார் தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், “டாக்டர் விஜயஸ்ரீ எம்.எஸ்.ராமையா நினைவு மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வீடு திரும்பியபோது வீர வரவேற்பைப் பெற்றார். தொற்றுநோயின் முன்னணியில் தன்னலமின்றி செயல்படும் # கொரோனா வாரியர்ஸ் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி. நாங்கள் உங்களை வணங்குகிறோம்," என்று பதிவிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்கும் பலர் அண்டை வீட்டாளர்களின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர்.மற்றவர்கள் பெருந்தொற்று காலத்தில் முன்னணியில் நின்று பணிபுரியும் மருத்துவர்களுக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
நெட்டிசன்களின் சில கமண்ட்ஸ் இங்கே :
Heart warming ❤️????
— Suresh@Unofficial (@SureshUnoffici1) May 3, 2020
Good to see such support to our warriors
— Bheemasen (@Bheemasen12) May 3, 2020
Superb ????. Great gesture by public.
— Vishwanath Shetty (@VishKodlady) May 3, 2020
Grand salute ????????????????
— Manish (@Manishc2016) May 3, 2020
Dr.vijayashree madam thank you ????????????????
Real hero's thank you ????????????
— Jayanth (@jaychandran_a) May 3, 2020
ಕಣ್ಣಿಗೆ ಕಾಣುವ ದೇವರು!
Dr. Vijayashree of Bengaluru received a heroic welcome when she returned home after tending to #COVID19 patients in MS Ramaiah Memorial Hospital.
A big thank you to all the #CoronaWarriors working selflessly on the frontline of this pandemic. We SALUTE you! pic.twitter.com/COHT4KYYE1
— M Goutham Kumar (@BBMP_MAYOR) May 2, 2020
We salute u
— Priyanka Chopra (@cpriyankabatta) May 3, 2020
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பற்ற பங்காற்றுவதற்காகவும், செய்துவரும் தியாகத்திற்காகவும், கொரோனா போராளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வணக்கம் தெரிவித்தார்.
அமித் ஷா வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் செய்தியில் “கொரோனா போராளிகளான கதாநாயகர்களுக்கு, இந்தியா தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. மோடி அரசாங்கமும், தேசம் முழுவதும் உங்களுடன் நிற்கிறது என்று நான் உறுதி கூறுகிறேன். சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, கொரோனாவிடமிருந்து தேசத்தை நாம் விடுவிக்க வேண்டும். சுகாதாரமான, செழிப்பான, வலுவான நாடாக இந்தியாவை உருவாக்கி, உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஜெய்ஹிந்த்” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.