Barack Obama shows off basketball skills on campaign trail :அமெரிக்கா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமே அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருக்கும் தருணம் இது. இந்த பதட்டமான சூழலை கொஞ்சம் மகிழ்ச்சியாக மாற்றவே வெளியாகியுள்ளது இந்த வீடியோ.
தன்னுடைய ஆட்சியின் போது துணை அதிபராக பதிவி வகித்த டெமாக்ரெடிக் கட்சி வேட்பாளாரான ஜோ பைடனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா. 59 வயதாகும் பாரக் ஒபாமா மிச்சிகன் பிரச்சாரத்தின் போது. அங்கே அருகில் இருந்த கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு சென்று கார்னர் ஷாட்டை எந்த விதமான கூடுதல் கவனமும் செலுத்தாலம் போட்டிருக்கிறார்.
இந்த 20 நொடி வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக செல்கிறது. பலரும் படையப்பா ரேஞ்சுக்கு வயசு தான் அதிகரிச்சு இருக்கிறதே தவிர அந்த துடிப்பு இன்னும் சற்றும் குறையவே இல்லை என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். ஒருவர் இரண்டு பேர் அல்ல கிட்டத்தட்ட 16 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர்.