/indian-express-tamil/media/media_files/2025/08/01/crash-suv-plows-2025-08-01-22-28-21.jpg)
ரிவர்ஸ் எடுக்க சொன்னது குத்தமா? கண்ணாடி சுவரை உடைத்து உள்ளே பாய்ந்த கார்! வைரல் சிசிடிவி!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ராமதா ஹோட்டலில் நள்ளிரவில் நடந்த விபத்து, ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவிற்காக ஹோட்டலுக்கு வந்த பெண் வழக்கறிஞர், தனது எஸ்.யு.வி காரை பின்னோக்கி எடுத்தபோது ஏற்பட்ட தவறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காரை பின்னோக்கி நகர்த்தும்போது, ஓட்டுநரான பெண் வழக்கறிஞர், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சலரேட்டரை தவறுதலாக மிதித்திருக்கிறார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து, ஹோட்டலின் பிரம்மாண்ட கண்ணாடிச் சுவரை உடைத்துக்கொண்டு பயங்கர வேகத்துடன் வரவேற்பு பகுதிக்குள் நுழைந்தது. இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
बैक करते समय महिला वकील से बेकाबू कार, होटल में कार घुसने का वीडियो वायरल !!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) July 28, 2025
यूपी के बरेली में होटल रमाडा में घुसी बेकाबू कार, घटना के बाद दोनों पक्षों में समझौता !!
बारादरी थाना क्षेत्र के गांधी उद्यान के पास है होटल !!#CCTVliveviralVideo#ViralVideopic.twitter.com/7mr5jrnKgs
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை. கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். கார் ஓட்டிய பெண் வழக்கறிஞர், விபத்தில் சிக்கிய நபர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஹோட்டல் நிர்வாகத்திற்கும் கார் ஓட்டிய பெண் வழக்கறிஞருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஹோட்டல் உரிமையாளர் சௌரப் மல்ஹோத்ரா உறுதிப்படுத்தியுள்ளார். இது தற்செயலான விபத்து எனக் குறிப்பிட்ட அவர், சிசிடிவி காட்சி வெளியானது குறித்து கவலை தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சி கசிவு குறித்து ஹோட்டல் நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.