New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/E3Ck_TVXoAQ1Gnl.jpg)
இங்கிலாந்தின் பருவ நிலைக்கு ஏற்றமாதிரி ஷார்ட்ஸோடு அமர்ந்திருப்பது குத்தமா என்ன? இப்படி ஓவரா பேசுறீங்களே நெட்டிசன்ஸ்
BBC anchor wears shorts under desk : கொரோனா ஊரடங்கு, கோடை காலம், கொளுத்தும் வெயில் என நாம் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றோம் தான். அதற்காக இப்படியா நியூஸ் ரூமில் ஷார்ட்ஸ் போட்டு அமர்ந்து செய்தி வாசிப்பது?
பி.பி.சி. செய்தி வாசிப்பாளர் ஷான் லே ஷாட்ர்ஸோடு நியூஸ் ரூமில் அமர்ந்து செய்தி வாசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு இது ஜூம் கால் இல்லை செய்தி வாசிக்கிறார் என்பதை நினைவூட்டுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர் அவரின் உடை பற்றி கவலைப்படாமல் அவரின் அர்பணிப்பை பாராட்டவும் செய்கின்றனர். அதில் ஒருவர், அவருக்கு எது விருப்பமான உடையோ அதனையே அணியட்டும். பல நேரங்களில் அவர் மாலை நேர செய்தி வர்ணனைக்காக வெகுநேரம் பணியாற்றுகிறார் என்றும் கூறியுள்ளனர்.
Do you think on the UK’s hottest day of the year that he said “I’m Shaun Ley” or “I’m wearing shorts today”? #hottestday #bbcnewscast #bbc pic.twitter.com/h7xEajWSAc
— Kevin Bellwood (@kevinbellwood) June 4, 2021
ஊரடங்கு காலங்களில் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஜூம் கால்கள் வரும் போது பெரும்பாலானோர் இப்படியாக உடை அணிந்து ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதும், இடையிடையே அவர்கள் வீட்டு நாய்கள், பூனைகள், குழந்தைகள், சமயத்தில் உறவினர்கள் எல்லாம் ஜூம் காலில் வந்து போதும் வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது தானே.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.