மனிதர்களிடத்தில் மட்டுமில்லாமல், உலகி எல்லா விலங்குகள் மத்தியிலும் தாய் பாசம் என்ற உணர்வு இருக்கிறது. மனிதர்கள் வயதான காலத்திலும் தங்கள் பிள்ளைகள் மீது அதே பாசத்துடன் இருப்பார்கள். ஆனால், விலங்குகள் தங்கள் குட்டிகள் பெரியதாக வளர்ந்த பிறகு விரட்டி விடுகின்றன. ஆனால், அதே விலங்குகள் குட்டியாக இருக்கும்போது, அவற்றைப் பாதுகாப்பதில் மனிதர்களையும் விஞ்சிய விலங்குகளின் தாய்ப்பாசம் இருக்கும்.
காட்டில் கரடி ஒன்று தனது குட்டியுடன் இருக்கும்போது ஒரு புலி தாக்க வருகிறது. அப்போது வெகுண்டெழுந்த கரடி தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காக புலியுடன் சண்டையிட்டு விரட்டி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காடுகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, தாய் கரடி தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காக புலியுடன் சண்டையிட்டு விரட்டி அடிக்கும் வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கரடி தனது குட்டியைப் பாதுகாப்பதற்காக வலிமையான வேட்டை விலங்கான புலியை அடித்து விரட்டும் வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.
“I can imagine no heroism greater than motherhood.” pic.twitter.com/tlrZcrKmMi
— Susanta Nanda (@susantananda3) September 30, 2024
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “தாய் பாசத்தைவிட பெரிய ஹீரோயிஸம் எதுவுமில்லை என்று நான் கற்பனை செய்யக்கூடும்” என்று பதிவிட்டுள்ளார். உண்மைதான், இந்த வீடியோவைப் பார்க்கிற எவரும், ‘தாய் பாசத்தைவிட பெரிய ஹீரோயிஸம் எதுவுமில்லை’ என்றுதான் சொல்வார்கள்.
இந்த வீடியோ குறித்து ஒரு எக்ஸ் பயனர் கருத்து தெரிவிக்கையில், “முற்றிலும், தாய்மை ஹீரோயிசத்தின் உண்மையான வடிவமாக திகழ்கிறது... அழகான காட்சி, அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது பயனர், “தாய் தன் குழந்தையுடன் எவ்வளவு மென்மையாக இருக்கிறாளோ அதே அளவுக்கு அவள் தன் குழந்தையைப் பாதுகாக்க கடினமாக இருப்பாள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்.. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதனால்தான், அவர் தாயைப் படைத்தார்” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
புலியை வலிமையான விலங்காக இருக்கலாம், ஆனால், தாய் பாசம் அதைவிட வலிமையான வீரமானது என்பதை இந்த தாய்க் கரடி நிரூபித்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.