நெல்லை அருகே கிணற்றுக்குள் விழுந்த கரடி: வீடியோ  

கிணற்றில் தவறி விழுந்து தத்தளிக்கும் கரடியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

By: Updated: November 23, 2020, 04:32:23 PM

Bear In Well Viral Video Nellai District : நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் சிங்கிகுளம் கிராமத்தில் கால்புரவு வயல்களுக்கு இடையே  உள்ள ஒரு கிணற்றில் கரடி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே சிங்கிகுளம் கிராமத்தினுள் கரடிகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்திருக்கின்றன. விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கிருக்கும் விளையும் பொருள்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வந்திருக்கின்றன. தொடர்ச்சியாக பொது மக்களைத் தொந்தரவு செய்து வரும் இந்த கரடிகளைப் பற்றி புகார் அளித்து வந்துள்ளனர் பொதுமக்கள். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரடிகள் கூட்டமாக கிராமத்தில் நுழைந்ததை அடுத்த அங்குக் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், கூண்டுக்குள் கரடிகள் சிக்கிக்கொள்ளவில்லை.

தொடர்ந்து, நேற்று கிராமத்தில் நுழைந்த கரடி, வயல்வெளிகளில் உள்ள கிணற்றிற்குள் தவறி விழுந்திருப்பதை இன்று அதிகாலை பொது மக்கள் கண்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் விழுந்த கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மயக்க ஊசி செலுத்தி, அதனைப் பத்திரமாக மீட்பதற்கு மருத்துவர்களும் வனத்துறை அதிகாரிகளும் செயல்பட தயாராகினர்.

தொடர்ந்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அரை மயக்கத்தில் இருக்கும் கரடியை மீட்க நினைத்த வனத்துறையினர், கூண்டை கிணற்றுக்குள் இறக்கினர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கூண்டு மீது ஏறி கரடி தப்பிச் சென்றது. கரடியின் இத்தகையைச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் கொண்ட மீட்புக் குழு, மயக்க ஊசி செலுத்தப்பட்டிருப்பதால் காட்டுப் பகுதியில் மயங்கி விழுந்திருக்கலாம் என கரடியை தேடும் பணியில் இறங்கினர்.

தப்பி ஓடிய கரடியை நீண்ட போரட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வலை போட்டுப் பிடித்து விட்டனர். மீண்டும் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு பாதுகாப்பான காட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் இளங்கோ அவர்கள் தலைமையில் செய்து வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து தத்தளிக்கும் கரடியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bear in well viral video nellai district tamilnadu viral news video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X