viral video: அமெரிக்காவில் கரடி ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் கதவைத் திறந்து நுழைய முயன்றபோது, அச்சம் அடைந்த மக்கள் கத்தி கூச்சலிட்டதால், கரடி காட்டுக்குள் ஓடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கரடி ஒன்று கார் கதவைத் திறந்து உள்ளே நுழைய முயன்றபோது அலாரத்திற்குப் பதிலாக, பார்வையாளர்கள் சத்தமாக கத்தி கூச்சலிட்டதையடுத்து, கரடி காட்டுக்குள் ஓடி மறைந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ள இந்த வீடியோவில், கரடி ஒரு தார் சாலையைக் கடந்து நிறுத்தப்பட்ட வெள்ளை நிற மெர்சிடிஸ் பென் காரை நெருங்குகிறது. ஆர்வமான கரடி காரின் கதவைத் திறந்து உள்ளே நுழைய முயல்கிறது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் பின்னணியில் பயத்தில் கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்கிறது. இதனால், குழப்பமடைந்த கரடி தன் பின்னங்கால்களில் நின்று சுற்றிப் பார்க்கிறது. பின்னர், கரடி பின்வாங்கி, பயந்து பின்நோக்கி நகர்கிறது. மக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், மிரண்டு போன கரடி வேகமாக காட்டுக்குள் ஓடுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், பின்னணியில் கூச்சலிடுபவர்களில் யார் அதிக சத்தத்துடன் கத்தி கூச்சலிடுகிறாரோ அவர்தான் அந்த காரின் உரிமையாளராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு இன்ஸ்டா பயனர், கார் கதவைத் திறந்த கரடி, தன்னுடைய கார் என்று நினைத்திருக்கும் என்று நகைச்சுவையாக கம்மெண்ட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“