நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.
இந்த நிலையில், கோத்தகிரி கண்ணிகா தேவி காலணியில் குடியிருப்பு பகுதியில் இரண்டு கரடிகள் இன்று காலை உலா வந்துள்ளது. இதனை அங்குள்ள பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கரடியால் குடியிருப்பு வாசிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"