scorecardresearch

என்ன குமாரு திரை தீ பிடிச்சுதா…? இணையத்தை கலக்கும் ‘பீஸ்ட் ரிவ்யூ’ மீம்ஸ்!

Tamil memes news; trending and social media viral Beast movie tamil memes Tamil News: பீஸ்ட் படம் குறித்து நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிறது.

Beast movie memes review in tamil

Beast movie memes review in tamil: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைதுள்ளார். நடிகர் விஜய்யுடன் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் ஆரவாரம், ஆட்டம்பாட்டத்துடன் திரையரங்குகளில் விஜய்யின் பீஸ்ட் படம் இன்று காலை முதல் வெளியானது. சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிகாலைக் காட்சி திரையிடப்பட்டதால் இரவு முதலே திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் குவியத் தொடங்கினர். திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியானதையொட்டி பட்டாசுகள் வெடித்து, ஆட்டம்பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். திரையரங்க வளாகங்கள் விழாக் கோலம் பூண்டது.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் – நடிகர் விஜய் – இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்த விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதில் ரசிகர்கள் கலவையான கருத்துளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பீஸ்ட் படத்தை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

இணையத்தை கலக்கும் ‘பீஸ்ட் ரிவ்யூ’ மீம்ஸ்:

இணையத்தை கலக்கும் ‘பீஸ்ட் ரிவ்யூ’ மீம்ஸ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Beast movie memes review in tamil