scorecardresearch

நண்பர்களே வேற ஒன்னும் இல்ல… இணையத்தை கலக்கும் “ஜாலியோ ஜிம்கானா” மீம்ஸ்!

Actor vijay’s Beast movie Second Single song Jolly O Gymkhana promo goes viral; latest tamil memes: ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை கையில் எடுத்துள்ள நமது நெட்டிசன்கள் தற்போது சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

Beast movie songs: Jolly O Gymkhana sung by vijay tamil memes

Tamil memes news: தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ‘பீஸ்ட்’ பட அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த மாதம் ‘அரபிக் குத்து’ பாடலை வெளியிட்டு குஷிப்படுத்தி இருந்தது தயாரிப்பு நிறுவனம். தற்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் இப்பாடல் 170 மில்லியன் பார்வைகளுக்கு மேல் சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், ‘பீஸ்ட்’ பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டைவெளியிட்டுள்ளது. ’ஜாலியோ ஜிம்கானா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி இருக்கிறார். இப்பாடல் மார்ச் 19-ல் வெளியாக உள்ள நிலையில், அந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று வெளியிடப்பட்டது.

இந்த ப்ரோமோ வீடியோ பாடலில் விஜய், அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே என அனைவரும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை பாடி செம ரகளை செய்கிறார்கள். இதனால், ப்ரோமோ வெளியாகிய சில மணிநேரங்களில் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகியது.

நடிகர் விஜய்

இந்நிலையில், ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை கையில் எடுத்துள்ள நமது நெட்டிசன்கள் தற்போது சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வைரல் மீம்ஸ்:

மற்ற நாடுகள் Vs இந்தியா</strong>

இந்தியாவில் வசிக்கும் மக்களும் மற்ற நாட்டினருக்கு இடையே உள்ள சில வித்தியாசங்களை மீம்ஸ்கள் மூலம் பதிவிட்டுள்ளனர்.

இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சில:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Beast movie songs jolly o gymkhana sung by vijay tamil memes

Best of Express