நடனம் ஆடி காதல் வலை வீசும் அழகிய பறவை; வைரல் வீடியோ

மார்பில் இளம்பச்சை நிற இறகுகள் கொண்ட ஒரு அழகிய பறவை சிறகுகளை விரித்து மயிலைப் போல நடனம் ஆடி மற்றொரு பறவைக்கு காதல் வலை வீசும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

Beautiful bird dancing, birds dancing, பறவை நடனம், அழகிய பறவை நடனம், Beautiful black bird, black bird dancing to attract another bird, viral video

இயற்கையின் படைப்பில் எல்லாமே அதிசயம்தான். எல்லாமே அழகுதான். எல்லா உயிரினங்களுக்குள்ளும் காதல் ஜீவனாக ஓடிக்கொண்டிருக்கிறது. காதல் ஒன்று இல்லையென்றால் பூமியில் எல்லா உயிரினங்களும் தோன்றியபின் விரைவிலேயே காணாமல் போயிருக்கும்.

காதலிக்கும்போது தனது இணையைக் ஈர்க்க மனிதர்கள் ஏதேனும் செய்வது என்பது மனிதர்களில் மட்டுமல்ல விலங்கினங்களிலும் நடக்கிறது. அது பறவைகளிலும் நடக்கிறது.

கழுத்தில் இளம் பச்சை நிற இறகுகளைக் கொண்ட ஒரு அழகிய கரும் பறவை அருகே வரும் வேறு ஒரு வகையைச் சேர்ந்த பறவையின் மீது காதல் கொள்கிறது. அதனால், அந்த பறவை வசீகரிக்கும் விதமாக சிறக்களை விரித்து மயிலைப்போல நடனம் ஆடுகிறது.

காதல் வலை வீசும் பறவையின் அழகிய தோற்றத்தைப் பார்க்கும் அந்த பறவை அதனுடன் சேர்ந்து சுற்றி நடனம் ஆடுகிறது இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் பலராலும் பகிரப்பட்டு வருவதால் வைரல் ஆகியுள்ளது.

Web Title: Beautiful bird dancing to attract another bird viral video

Next Story
‘ஹெல்மெட் எதற்காக அணிகிறோம்?’ – வைரலாகும் காவலர் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com