viral video: இந்த வீடியோவை நார்வே தூதரக முன்னாள் அதிகாரி எரிக் சொல்ஹெய்ம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மூன்று சிறுவர்கள் மொட்டை மரத்தில் கயிறு கட்டி ராட்டினம் சுற்றிய மகிழ்ச்சியான வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
பொதுவாக பலரும் பொருட்களை வைத்திருப்பதிலோ அல்லது பொழுதுபோக்க பணம் கொடுப்பதிலோ மகிழ்ச்சியைத் தேட இந்த நுகர்வுக் கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளது. பணம் வைத்திருப்பது அல்லது பணம் செலவு செய்தால்தான் பொழுதுபோக்கில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற அவசியமில்லை. ஆனால், அதில் நம்மை வியக்க வைக்கும் மகிழ்ச்சி, ஆச்சரியம், இருந்தால் போதும், நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். இதைப் பற்றி நாம் அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போது வைரலாகி வரும் தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோவில், மூன்று சிறுவர்கள் சேர்ந்து தங்களிடம் உள்ளதை பயன்படுத்தி எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் பாருங்கள்.
மூன்று சிறுவர்கள் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் இந்த அழகான மகிழ்ச்சியான வீடியோ நிச்சயமாக உங்களைப் மனதுக்குள் மகிழ்ச்சியாக உணர வைத்து புன்னகைக்க வைக்கும்.
குடை ராட்டினம் சுற்ற வேண்டுமானல், திருவிழாவுக்கு செல்ல வேண்டும், அல்லது பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல வேண்டும், கடற்கரைக்கு செல்ல வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என்ற அவசியம் இந்த சிறுவர்களுக்கு ஏற்படவில்லை. இந்த மூன்று சிறுவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மொட்டை மரத்தில் மூன்று கயிறுகளைக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டு குடை ராட்டினம் சுற்றுகிறார்கள். அப்படியே குடை ராட்டினத்தில் சுற்றுவதைப் போல காற்றில் பறக்கிறார்கள் மகிழ்ச்சியாக கூச்சலிட்டு விளையாடுகிறார்கள்.
நார்வே தூதரக முன்னாள் அதிகாரி எரிக் சோல்ஹெய்ம் (@ErikSolheim) இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும இருக்கும் திறன் ஒரு வல்லைமை. நாம் வயதாகும்போது அது குறைந்து போகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ட்விட்டர் பயனர் ஒருவர், “இதை ஒப்புக்கொள்கிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பார்க்கும் திறன் ஒரு வல்லமை. அதை நாம் வாழ்நாள் முழுவதும் போற்றி வளர்க்க வேண்டும். அந்த குழந்தை உள்ளத்தை வாழ வைப்போம்! #மகிழ்ச்சி #மகிழ்ச்சியான வாழ்க்கை” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், “இதை பார்க்கும்போது எனக்கு மயக்கம் வருகிறது. ஆம், இதுபோன்ற அழகான குழந்தை பருவ நினைவுகள் நினைவுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற வீடியோ, இளம் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான மேம்பாட்டைக் காட்டும் வீடியோ, ஜூன் 2020 இல் வைரலானது. இரண்டு குழந்தைகள் ஒரு தற்காலிக சீ-சாவில் விளையாடுவதை வீடியோ காட்டியது. மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஷேர் சிங் மீனா ட்வீட் செய்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“