நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்து சில நாட்களிலேயே தாய் யானையைப் பிரிந்து ஆற்றில் தத்தளித்த நோஞ்சான் பீர் யானைக் குட்டி மீட்கப்பட்டு, இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள் என்று ஐ.எஃப்.எஸ் அதிகாரி பகிர்ந்த ஒரு யானைக் குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கு யானை, மிகவும் நுண்ணறிவு மிக்க யானைகளே காடுகளின் பரப்பைக் காக்கும் பாதுகாவலர்களாக உள்ளன. ஒரு யானை நாள் ஒன்றுக்கு உணவுக்காக 50 கி.மீ வரை நடந்து செல்லும், யானைகள் சமூகமாக வாழும் விலங்குகள். ஒரு யானைக் கூட்டத்தில் அதிகபட்சமாக 90 யானைகள் வரை உள்ளதாகக் கூறுகிறார்கள். யானைகள் காடுகளை குறுக்கும் நெடுக்குமாக அறிந்தவை, அதன் வழித்தடங்கள் யானைகளின் மனதில் நினைவில் இருக்கும். காடுகளின் பாதுகாவலர்களாக யானைகளைக் கூறினால் அந்த யானைகளையும் காடுகளையும் சேர்த்து பாதுகாப்பவர்கள் வனத்துறையினர்.
யானைகள் மற்றும் மனிதர்கள் இடையே மோதல் நடைபெறாமல் தடுப்பதில் வனத்துறையினர் முக்கியப் பங்காற்றுகின்றனர். யானைகள் ஏதாவது ஆபத்தில் சிக்கினால் அவற்றை வனத்துறை ஊழியர்களே மீட்கின்றனர்.
அப்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்து சில நாட்களிலேயே தாய் யானையைப் பிரிந்த, நோஞ்சான் பீர் யானைக் குட்டியை மீட்டு, அதை இப்போது எப்படி வளர்த்து இருக்கிறோம் பாருங்கள் என்று ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த ஒரு யானைக் குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sharing this beautiful story of Beer elephant. He was rescued as a few days old weak and exhausted baby. He got separated from Mother & herd. Later got drifted in river flood water. Timely rescued by our teams in September 2020. Look how he is now !! pic.twitter.com/BbR0Mn8bpa
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 2, 2024
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு யானையின் அழகான கதை என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பீர் என்ற யானைக்குட்டி நோஞ்சானாக காணப்படுகிறது. பிறகு, அந்த யானைக் குட்டியை வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக பராமரித்து வளர்க்கிறார்கள். அதை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். பின்னர், அந்த பீர் யானைக் குட்டி வளர்ந்து பெரிய யானையாக நிற்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் குறிப்பிடுகையில், “பீர் யானையின் இந்த அழகான கதையைப் பகிர்கிறேன். பிறந்து சில நாட்களே ஆன பலவீனமான மற்றும் சோர்வுற்ற குழந்தையாக மீட்கப்பட்டது. அவன் தாயிடமிருந்தும் மற்றும் மந்தையிலிருந்தும் பிரிந்து, ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தான். செப்டம்பர் 2020-ல் எங்கள் குழுவினரால் சரியான நேரத்தில் மீட்கப்பட்டது. அவன் இப்போது எப்படி இருக்கிறான் என்று பாருங்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பலரும், வனத்துறையினரின் இந்த மகத்தான பணியைப் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.