தாஜ்மஹாலுக்கு உள்ளேயும் 'ரீல்ஸ்' மோகம்: வைரலான ரகசிய வீடியோவால் எழுந்த சர்ச்சை!

தாஜ்மஹாலின் உள்ளே வீடியோ, புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபர் விதிமுறைகளை மீறி, அதன் பிரதான குவிமாட அறைக்குள் இருக்கும் நினைவுச் சின்னங்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தாஜ்மஹாலின் உள்ளே வீடியோ, புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபர் விதிமுறைகளை மீறி, அதன் பிரதான குவிமாட அறைக்குள் இருக்கும் நினைவுச் சின்னங்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Taj Mahal Video

தாஜ்மஹாலுக்குள்ளும் 'ரீல்ஸ்' மோகம்: வைரலான ரகசிய வீடியோவால் எழுந்த சர்ச்சை!

ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் காதல் சின்னமாக கம்பீரமாக நிற்கும் தாஜ்மஹால், உலகின் 7 அதிசயங்களில் ஒன்று. முகலாய மன்னன் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய இந்தக் காவியப் படைப்பு, அதன் அழகால் ஆண்டுதோறும் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால், தாஜ்மஹாலின் உண்மையான ரகசியம் அதன் உள்ளே, வெளி உலகுக்குத் தெரியாத நிலவறைக்குள் புதைந்து உள்ளது.

Advertisment

சமீபத்தில் ஒரு நபர், தாஜ்மஹாலின் உள்ளே வீடியோ எடுக்கத் தடை இருந்தும், துணிச்சலாக ஒரு காட்சியைப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஷாஜஹான்-மும்தாஜின் போலி கல்லறைகள், அதாவது நினைவுச் சின்னங்கள் (Cenotaphs), கண்கவர் கலை வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. பளிங்குக் கற்களாலான இந்த நினைவுச் சின்னங்களை சுற்றி, பூக்களைப்போல் வடிவமைக்கப்பட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.

https://www.instagram.com/reel/DG51FkgTwqW/?utm_source=ig_web_copy_link

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி, 24 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. பலர் இந்த துணிச்சலான செயலைப் பாராட்டி, "வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தாஜ்மஹாலுக்குள் சென்று வந்த உணர்வு" என்று கமென்ட் செய்தனர். வேறு சிலரோ, "காதல்ன்னா அப்போ ஒரு மாசல்லா" என ஷாஜஹான்-மும்தாஜ் காதலைப் புகழ்ந்து தள்ளினர்.

Advertisment
Advertisements

ஆனால், சிலர் விதிகளுக்கு அப்பாற்பட்டு வீடியோ எடுத்ததைக் கண்டித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவில் இருப்பது உண்மையான கல்லறைகள் அல்ல என்றும், உண்மையான கல்லறைகள் பூமிக்கு அடியில், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாத ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் பலரும் சுட்டிக் காட்டினர்.

ஏனெனில், கடந்த காலத்தில் உண்மைக் கல்லறைகளைப் பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நினைவுச்சின்னத்தின் பாதுகாப்பு மற்றும் புனிதத்தன்மையைக் காக்க தற்போது அந்த அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில், வெளி உலகுக்குத் தெரியாத ரகசியங்கள் இன்னும் புதைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

Taj Mahal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: