ஆஸ்கர் விழாவில் ஒயின் கோப்பையுடன் நாற்காலி மீது தாவிய நடிகை

90வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் டால்பி தியேட்டரில் கோலாகலமாக நேற்று (செவ்வாய் கிழமை) நிறைவடைந்தது.

90வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் டால்பி தியேட்டரில் கோலாகலமாக நிறைவடைந்தது. சர்வதேச அளவில் திறைத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஆஸ்கர் விருது முதன்மையானதாகும். நடிகைகளின் கண்கவர் ஆடைகள், சக நடிகர்களின் நட்பு பாராட்டல், விருது வென்றவர்களின் உணர்ச்சிமிகு தருணங்கள், வரலாற்று சிறப்பு வாய்ந்த பேச்சுகள் என ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் களைகட்டும்.

இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிலும் இவற்றுக்கெல்லாம் பஞ்சம் இல்லை. ஆனால், ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் தன் கையில் ஒயின் கோப்பையுடன், நாற்காலியில் ஏறி குதித்தி விழாவில் அட்டகாசம் செய்ததுதான் இந்தாண்டு ஆஸ்கர் விழாவின் ஹைலைட்.

டால்பி தியேட்டருக்குள் நுழைந்தவுடனேயே வழக்கமாக கொடுக்கு போஸ்களை கொடுத்து முடித்தவுடன், கலாட்டாவாக சிகப்பு கம்பளத்தில் அவர் கொடுத்த போஸ் காண்போரை கலகலப்பில் ஆழ்த்தியது.

அவரது இந்த சின்னச்சின்ன லீலைகள் தான் தற்போது பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் தாண்டி அவரது தங்க நிற ஜொலிக்கும் உடையும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close