பெல்லி டான்ஸர்கள் மூலமாக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி: வைரல் வீடியோ

ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Belly dancers steal the show at Pak investment summit viral video - பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் - வறுத்தெடுக்கும் சமூகவாசிகள்

Belly dancers steal the show at Pak investment summit viral video - பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் - வறுத்தெடுக்கும் சமூகவாசிகள்

முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, பாகிஸ்தானின் சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி (எஸ்.சி.சி.ஐ.பி) அஜர்பைஜானின் பாகுவில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்து, பெல்லி நடனக் கலைஞர்களை இந்த நிகழ்வுக்கு அழைத்து ஆட வைத்திருக்கிறது.

Advertisment

முதலீட்டு மாநாட்டின் வீடியோவில் பெல்லி கலைஞர்களின் ஆட்டம், சமூக ஊடகங்களில் வைரலாக, பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Advertisment
Advertisements

1.19 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோ கிளிப்பை கிளிப்பை பத்திரிகையாளர் குல் புகாரி பகிர்ந்துள்ளார்.  அதில், “பாகிஸ்தான் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில், பெல்லி நடனக் கலைஞர்கள் கொண்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சித்த போது... என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு பயனர் "ஒரு தேசமாக நாம் எங்கு செல்கிறோம்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: