/indian-express-tamil/media/media_files/2025/10/14/bmtc-shocking-video-2025-10-14-08-00-52.jpg)
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பானஷங்கரிக்குச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து 3 ஆட்டோ ரிக்ஷாக்கள், 3 கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் உட்பட 9 வாகனங்கள் மீது மோதிய பின்னரே நின்றது. Photograph: (Image Source: x/ @TheDailyPioneer)
பெங்களூருவில் சின்னசுவாமி ஸ்டேடியம் அருகே பி.எம்.டி.சி அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பல வாகனங்கள் மீது மோதியது. கெம்பேகௌடா சுரங்க சாலை நிலையத்திலிருந்து பனஷங்கரி சென்று கொண்டிருந்த இந்த மின்சார பேருந்தின் ஓட்டுநர் லோகேஷ் குமார் (35) பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அறியாமல் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் பேருந்து வேகமாக சென்றது.
வேகமாக சென்ற பேருந்தை நடத்துநர் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால், பேருந்து முன்னே சென்ற 9 வாகனங்கள், 3 கார்கள், 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் பல இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தின்போது, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்ட பின், பேருந்து முன்னே செல்லும் வாகனங்கள் மீது மோதுவது பதிவாகி உள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் பலர் சிறு காயங்களுடன் அவசர சிகிச்சை பெற்றனர். பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
#Bengaluru: A BMTC bus went out of control after its driver suffered a sudden seizure while driving near Chinnaswamy Stadium. The bus, en route from Kempegowda International Airport to Banashankari, rammed into 9 vehicles — including three autorickshaws, three cars, and several… pic.twitter.com/5Xyp39Txgu
— The Pioneer (@TheDailyPioneer) October 13, 2025
இந்த விபத்தின் சிசிடிவி வீடியோவை, தி பயனீர் (The Pioneer) எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், பி.எம்.டி.சி (BMTC) பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பானஷங்கரிக்குச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து 3 ஆட்டோ ரிக்ஷாக்கள், 3 கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் உட்பட 9 வாகனங்கள் மீது மோதிய பின்னரே நின்றது.
வலிப்பு ஏற்பட்டபோது ஓட்டுநர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், வாகனம் கட்டுப்பாடு இல்லாமல் அதிவேகமாகச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 15 பயணிகள் இருந்துள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.