பெங்களூருவில் ஓடும் காரில் ’சன்ரூஃப்’ வழியாக வெளியே பார்த்த சிறுவன்; தடுப்பில் மோதி பலத்த காயம்: வைரல் வீடியோ

பெங்களூருவில் வித்யாரண்யபுராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்து, இந்தியாவில் கார் சன்ரூஃப்களை வைப்பதற்கு எதிராக நெட்டிசன்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

பெங்களூருவில் வித்யாரண்யபுராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்து, இந்தியாவில் கார் சன்ரூஃப்களை வைப்பதற்கு எதிராக நெட்டிசன்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
Bengaluru car

ஓடும் கார் சன்ரூஃப் வழியாக வெளியே பார்த்த சிறுவன் தலை தடுப்பில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பெங்களூருவில் ஓடும் காரின் சன்ரூஃப் வழியாக வெளியே தலையை நீட்டியிருந்த சிறுவன், மேலே இருந்த தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயம் அடைந்தான். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை வித்யாரண்யபுராவில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

காரின் சன்ரூஃப் வழியாக வெளியே வந்த சிறுவன் மீது தடுப்புக் கம்பியில் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், சிவப்பு நிற எஸ்.யூ.வி காரில், சன்ரூஃப் வழியாக ஒரு சிறுவன் தலையை வெளியே நீட்டி அமர்ந்திருக்கிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக, கார் ஒரு தடுப்புக் கம்பியைக் கடக்கும்போது, அது சிறுவனின் தலையில் பலமாக மோதியது. இதில், நிலை குலைந்த சிறுவன், உடனடியாக காருக்குள் குனிந்து அமர்ந்து கொண்டான். இதில், அந்தச் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் கவலையும், கோபமும் தெரிவித்து வருகின்றனர். பலர், காரில் இருந்த பெரியவர்களின் கவனக்குறைவைக் கண்டித்துள்ளனர்.

Advertisment
Advertisements

இது குறித்து ஒரு பயனர், “ஐயோ... பயங்கரம். அந்தக் குழந்தைக்காக வருந்துகிறேன். குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இந்த விபத்துக்கு பெற்றோர் முழுப் பொறுப்பு. இந்தியாவில் இந்த சன்ரூஃப் வசதிகள் ஏன் வழங்கப்படுகின்றன என்று தெரியவில்லை. இது தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், “அந்தக் குழந்தைக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால், இதை பார்க்கும் போது ஒருவித திருப்தியாக உள்ளது. இந்த மாதிரி செய்வது சரி என்று நினைப்பவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “பெற்றோர் அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் மூளைக் காயத்தை பரிசாக அளித்துவிட்டார்கள்,” என்றும், மற்றொருவர், “இப்படி நான் நினைக்கக்கூடாது என்று எனக்குத் தெரியும், ஆனால் சன்ரூஃப்களில் இருந்து வெளியேறி சாலைகளில் விளையாடுபவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்பது மிகவும் திருப்தியாக உள்ளது” என்றும் கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

வாகனங்களில் சன்ரூஃப்கள் பொழுதுபோக்கிற்காக இல்லை என்றும், குழந்தைகளை பாதுகாப்பாக அமர வைக்குமாறும் காவல் துறையினர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு இந்த வசதி தேவையற்றது என்று பல சமூக வலைதளப் பயனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: