Advertisment

மணப்பெண் தேடித் தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம் - நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

தனது மகனுக்கு மணப்பெண்ணைத் தேடித் தராத மேட்ரிமோனி இணையதள நிறுவனத்தை அணுகியவர் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் அந்த மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.60,00 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

author-image
WebDesk
New Update
Court order 123

பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் அந்த மேட்ரிமோனி நிறுவனத்திற்கு ரூ.60,00 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

பெங்களூரு எம்.எஸ்.நகரில் வசிக்கும் விஜயகுமார் கே.எஸ்., தனது மகன் பாலாஜிக்கு மணமகளைத் தேடிக்கொண்டிருந்தார். அவர் கல்யாண் நகரில் அலுவலகம் உள்ள தில்மில் மேட்ரிமோனி இணையதளம் நிறுவனத்தைப் பார்த்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Bengaluru consumer court fines matrimony portal Rs 60,000 for failing to find potential bride for man

விஜயகுமார் மார்ச் 17-ம் தேதி தேவையான ஆவணங்கள் மற்றும் தனது மகனின் புகைப்படங்களுடன் அந்த மேட்ரிமோனி நிறுவனத்தை அணுகினார். தில்மில் மேட்ரிமோனி, மணப்பெண்ணைத் தேடித் தர ரூ.30,000 கட்டணமாகச் செலுத்தும்படி கேட்டது. விஜயகுமார் அன்றே பணத்தை செலுத்தினார். 45 நாட்களுக்குள் பாலாஜிக்கு மணமகளைத் தேடிக் கண்டுபிடிப்பதாக தில்மில் மேட்ரிமோனி வாய்மொழியாக உறுதியளித்தது.

தில்மில் மேட்ரிமோனியால் பாலாஜிக்கு பொருத்தமான மணமகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் விஜய குமார் அவர்களின் அலுவலகத்திற்கு பலமுறை சென்று வந்தார். பல சந்தர்ப்பங்களில், அவரை காத்திருக்கும்படி கேட்டுள்ளனர். இதன் விளைவாக தாமதம் ஏற்பட்டது. ஏப்ரல் 30-ம் தேதி, விஜயகுமார் தில்மில் அலுவலகத்திற்குச் சென்று தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.

இருப்பினும், ஊழியர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது வருகையின் போது அவரை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி வார்த்தைகளால் திட்டினர்.

இதனால், மே 9-ம் தேதி விஜய குமார் ஒரு சட்ட நோட்டீஸ் அனுப்பினார், ஆனால், தில்மில் பதிலளிக்கவில்லை. வழக்கு விசாரணைக்குப் பிறகு, அக்டோபர் 28-ம் தேதி ஒரு உத்தரவில், "புகார்தாரர் தனது மகனுக்கு பொருத்தமான மணப்பெண்ணைத் தேர்வுசெய்ய ஒரு சுயவிவரத்தைப் பெறவில்லை, மேலும் புகார்தாரர் எதிர்தரப்பு (தில்மில்) அலுவலகத்திற்குச் சென்றபோதும், அவர்கள் அவரை திருப்திப்படுத்தவோ அல்லது புகார்தாரருக்கு தொகையை திருப்பித் தரவோ முடியவில்லை.

ஆணையத்தின் தலைவர் ராமச்சந்திரா எம்எஸ் உத்தரவில், “புகார்தாரருக்கு சேவை செய்யும் போது எதிர்தரப்பு மூலம் தெளிவான குறைபாடு இருப்பதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் எதிர்தரப்பு ஈடுபட்டுள்ளது என்றும் ஆணையம் கூறியது. இந்த புகாரில் வழங்கப்பட்ட பிற நிவாரணங்களுடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு எதிர்தரப்பு பொறுப்பாகும்.” என்று கூறியுள்ளது.

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ. 30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ. 20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ. 5,000, வழக்கு செலவு ரூ. 5000 என மொத்தம் ரூ. 60,000-ஐ விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment