New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/3Ahr7XAJ2DnlxPfT2Sho.jpg)
செருப்பை வீட்டுக்கு வெளியில் வைக்க ரூ.24,000 அபராதம்: பெங்களூரு இளைஞர் வீண் பிடிவாதம்!
பெங்களூருவில் பிரஸ்டீஜ் சன்ரைஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், தன் வீட்டு வெளிப்புற காரிடாரில் ஹூ ரேக் வைப்பதற்காக இளைஞர் ஒருவருக்கு ரூ. 24,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார்.
செருப்பை வீட்டுக்கு வெளியில் வைக்க ரூ.24,000 அபராதம்: பெங்களூரு இளைஞர் வீண் பிடிவாதம்!
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் காலணியை வைத்துக்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் அபராதம் செலுத்தி வருகிறார். ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார்.
தீயணைப்பு விதிமுறைகளின்படி, அடுக்குமாடி குடியிருப்புகளின் காரிடார்கள் காலியாக இருக்க வேண்டும். எந்த பொருட்களையும் வைக்க கூடாது. அவசர சந்தர்ப்பங்களில் மக்கள் வெளியேற, தீவிபத்துகள் நடந்தால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் நோக்கில், இதுபோன்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
தற்போது காலணியை வெளியே வைப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பு அபராதத் தொகையை ரூ.200 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், இனி நாளொன்றுக்கு ரூ.200 அபராதம் செலுத்த வேண்டிய நிலை அந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் பிரிஸ்டீஜ் சன் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்ப்பின் கூட்டமைப்பில், வசித்துவருவோருக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
1,046 வீடுகள் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பினுள் பொதுவான இடங்களில் காலணி அலமாரி (ஷூ ரேக்), பூச்செடிகள், அட்டைப் பெட்டிகள் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற விதியும் உண்டு. இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 4 வாரங்களில் குடியிருப்பில் வசித்துவந்த பலரும் தங்கள் பொருள்களை பொதுவான இடமாகக் கருதப்படும், வாசல் வழித்தடங்களில் இருந்து எடுத்துவிட்டனர். இருவர் மட்டுமே இதனைப் பின்பற்றவில்லை.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Bengaluru man refuses to keep shoe rack inside house
அதில் ஒருவர் இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டார். மற்றொரு இளைஞர், தனது காலணி வைக்கும் அலமாரியை மாற்றவில்லை. காலணி அலமாரியை எடுத்து உள்ளே வைப்பதற்குப் பதிலாக, பொது இடமான வழித்தடத்தில் வைக்க ரூ.15,000 தொகையை முன் அபராதமாக அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பிடம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
தற்போது 8 மாதங்களுக்கு ரூ.24,000 அபராதமாக செலுத்தியுள்ளார். இன்னும் அவர் தனது காலணி அலமாறியை வழித்தடத்தில் இருந்து எடுக்காததால், அன்றாட அபராத தொகையை, 200 ரூபாயாக உயர்த்தலாமா என்றும் ஆலோசிக்கின்றனர். இதனால், அவர் மாதந்தோறும் ரூ.6,000 அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை சமூகத்தில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அந்த மனிதரை பகிரப்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான விதிகளை அப்பட்டமாக மீறுவதாகப் பார்க்கின்றனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த உடனேயே, பல பயனர்கள் எதிர்வினையாற்றினர். "தனிப்பட்ட பொருட்கள் அனைத்தும் உங்கள் குடியிருப்பில் வைக்க வேண்டும். காலணிகள், குழந்தைகளின் பொம்மைகள், குப்பைத் தொட்டிகளுடன் பொதுவான தாழ்வாரங்களை ஒழுங்கீனப்படுத்தும் மக்கள் நரகத்தைப் போல எரிச்சலூட்டுகிறார்கள்" என்று ஒரு பயனர் எழுதினார். "தேவையற்ற ஆணவம்" என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார். "யாரோ ஒருவர் காலணிகளை திருடிவிட்டால், அவர் அடுத்த நாளிலிருந்து திருந்துவார்” என்று 3-வது பயனர் எதிர்வினையாற்றினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.