/indian-express-tamil/media/media_files/2025/11/04/bengaluru-rider-frying-pan-helmet-2-2025-11-04-13-34-58.jpg)
ரூபேனா அக்ரஹாரா பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அவ்வழியாகச் சென்றவர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களின் கவனத்தை ஒருசேர ஈர்த்தது. Photograph: (Image Source: @karnatakaportf/X)
பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவர், ஹெல்மட் அணியாததால், போக்குவரத்துக் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, ஹெல்மெட்டுக்குப் பதிலாக ஒரு கடாயை அணிந்து சென்ற வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது.
ரூபேனா அக்ரஹாரா பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அவ்வழியாகச் சென்றவர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த எக்ஸ் பயனர் @karnatakaportf, “அவர் தனது வீட்டு கடாயை ஐ.எஸ்.ஐ (ISI) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் போல வைத்திருந்ததைக் கண்டு, பார்வையாளர்களும் போக்குவரத்துக் காவலர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், இதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது, இது பயங்கரமானது. ஒரு கடாயால் ஆம்லெட்டைத் திருப்பிப் போட முடியுமே தவிர, தலையைக் காப்பாற்ற முடியாது. ஹெல்மெட்டுகள் ஒரு விருப்பமான பேஷன் துணைப் பொருள் அல்ல, அவை உயிர் காக்கும் சாதனங்கள்” என்று எழுதியுள்ளார்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
Peak Bengaluru moment! In a scene straight out of a comedy sketch, a pillion rider near Roopena Agrahara was spotted trying to escape a traffic challan by covering his head with wait for it a frying pan instead of a helmet.Yes, a frying pan. Because apparently, when life gives… pic.twitter.com/jhFWCTrvKi
— Karnataka Portfolio (@karnatakaportf) November 1, 2025
இந்த வீடியோ விரைவாகப் பலரின் கவனத்தை ஈர்த்து, பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியது. “பெங்களூருவில் மட்டுமே போக்குவரத்து விதிகள் இவ்வளவு விசித்திரமாக இருக்கும், சமையல் பாத்திரம்கூடப் பாதுகாப்புக் கியராக மாறும். 'பாதுகாப்பு முதலில், காலை உணவு பிறகு” என்று அந்த நபர் உண்மையிலேயே சொல்லியிருக்கிறார். அபராதம் எழுதும்போது போலீஸ்காரர்கள் சிரிக்காமல் இருக்க முயற்சி செய்வதை கற்பனை செய்து பாருங்கள், இது குறைந்த பட்ஜெட்டில் இந்திய கண்டுபிடிப்பின் உச்சம்” என்று ஒரு சமூக ஊடகப் பயனர் எழுதினார்.
“பொதுவாகப் போக்குவரத்தில் காணப்படும் ஹெல்மெட் என்பது கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட் ஆகும். ஆனால் விபத்துக்களிலிருந்து பாதுகாக்க கிராஷ் ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஹெல்மெட் விழும் பொருட்களிலிருந்து பாதுகாப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நம் போலீஸ் அதிகாரிகளுக்கு வித்தியாசம் தெரியாதது துரதிர்ஷ்டவசமானது” என்று மற்றொரு பயனர் கருத்துத் தெரிவித்தார். “அவர் மனைவி சமையலறையில் எதையாவது தேடிக் கொண்டிருக்க வேண்டும்!” என்று மூன்றாம் நபர் வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us