New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/23/ZkWibNZIx8RIsc2AAx7y.jpg)
பெங்களூரு ரேபிடோ ஆட்டோ ஓட்டுநர் மார்ச் 15, 2025 தேதியிட்ட பில்லின் படத்தைக் காட்டியதாக ஆட்டோவில் பயணம் செய்த பயணி கூறினார்.
சமீபத்தில் ஒரு ரெடிட் பயனர், வாடகை வாகனங்களில் சவாரி செய்வதற்கு புக்கிங் செய்யும் தளமான ராபிடோ மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சவாரியின் கொடூரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார. ஆட்டோ ஓட்டுநர் கூடுதல் கட்டணம் கேட்டார், கூடுதலாக பணம் தர மறுக்கப்பட்ட பிறகு துஷ்பிரயோகம் செய்தார். இந்த வைரல் பதிவில், ஸ்பேம் கணக்கைப் பயன்படுத்தி தனது அடையாளத்தை மறைக்க, ஆட்டோ ஓட்டுநர் மார்ச் 15, 2025 தேதியிட்ட பில்-லின் படத்தைக் காட்டியதாகக் கூறினார்.
“நான் என் கல்லூரியிலிருந்து என் வீட்டிற்கு செல்ல ரேபிடோவில் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தேன், முழு பயணமும் நன்றாக நடந்தபோது (ஆட்டோ வேறு நம்பர் பிளேட்டுடன் வந்தது. இது மிகவும் வழக்கமானது, எனவே நான் அதைப் பொருட்படுத்தவில்லை), அவர் சென்றதும், எனது தொலைபேசியில் காட்டப்பட்டதை விட அதிக விலையைக் குறிப்பிடும் ஒரு புகைப்படத்தைக் காட்டினார் (ரூ.256 கட்டனத்துக்கு பதிலாக ரூ.338 காட்டினார்). பில்லின் படத்தில் '15 மார்ச் 2025' தேதி இருந்தது” என்று ரெடிட் பயனர் பதிவில் பகிர்ந்து கொண்டார்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர் ரேபிடோ செயலியைக் காட்ட மறுத்து, தன்னை அறைந்து விடுவதாக மிரட்டியதாகவும் பயணி கூறினார். “நான் அவரிடம் பலமுறை செயலியைக் காட்டச் சொன்னேன், கன்னடம் தெரியாததற்காக அவர் கத்திக் கொண்டே இருந்தார், கன்னடம் தெரியாததற்காக என்னை திட்டினார்” என்று ரெடிட் பயனர் கூறினார்.
அந்தப் பதிவில், பணம் பெற்ற 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் ஓட்டுநர் பயணத்தை முடித்ததாகவும் ரெடிட் பயனர் குறிப்பிட்டுள்ளார். “நான் இறுதியில் அவர் சொன்ன தொகையை செலுத்தினேன், அவர் 30 நிமிடங்களுக்குப் பிறகு, நான் சேருமிடத்திலிருந்து 2.4 கி.மீ தொலைவில் பயணத்தை முடித்தார். இப்போது, அந்த சம்பவத்திற்காக ரேபிடோவிடம் புகார் செய்ய விரும்புகிறேன், ஆனால், அவருக்கு எனது இருப்பிடம் தெரியும், அவர் ஏதாவது செய்வார் என்று நான் பயப்படுகிறேன்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இங்கே அந்த பதிவைப் பாருங்கள்:
ஆட்டோ ஓட்டுநர் என்னை அறைவதாக மிரட்டினார்.
இந்தப் பதிவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவு வாக்குகளையும் குறைந்தது இருநூறு பதில்களையும் பெற்றது, அதில் ஒன்று, “ஒருபோதும் குடியிருப்பு இடத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு அருகிலோ இறக்கிவிடாதீர்கள். எப்போதும் அருகிலுள்ள கடைக்கு அருகில் அல்லது நுழைவு வாயிலில் அல்லது உங்கள் வீட்டிலிருந்து அல்லது யாருடைய வீட்டிலிருந்தும் எங்காவது அதைச் செய்யுங்கள்” என்று கூறியது. மற்றொரு பயனர், “ஆட்டோக்காரர்கள் ரவுடிகள். இந்த சம்பவத்திற்கு எதிராக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ரேபிடோவில் புகாரளிக்கவும், பணத்தைத் திரும்பப் பெறவும். ஆனால், அடுத்த முறை, பைக்குகள்/கேப்களை முயற்சிக்கவும். ஆட்டோவைத் தவிர்க்கவும்.” என்று கூறியுள்ளார்.
“எனக்கும் இதேதான் நடந்தது, நான் பதிலடி கொடுத்து அவரை அறைந்தேன், எங்களுக்குள் சண்டை மூண்டது, அவர் ஒரு கத்தியை எடுத்தார். கடவுளுக்கு நன்றி, போலீசார் சரியான நேரத்தில் வந்தார்கள்” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, சவாரியை ரத்து செய்ய மறுத்ததால், ரேபிடோ ஓட்டுநர் ஒருவர் தொழில்நுட்ப வல்லுநரை மிரட்டினார். அந்தப் பெண் சமூக ஊடக தளமான எக்ஸ்-ல் ஓட்டுநரின் தவறான செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.