ஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்!

பணம் பறிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.

பெங்களூரில்  இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்  ஹெல்மெட் அணியாததால்  டிராபிக் போலீஸ் ஒருவர், அவர்களை செருப்பை கழட்டி தாக்கும் வீடியோ பலரின் எதிர்புக்கும் ஆளாகியுள்ளது.

சமீப காலமாக  டிராபிக் போலீஸ் பொதுமக்களிடம் நடந்துக் கொள்ளும்  விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருவது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல்  இருசக்கர வாகனங்ளில்  செல்பவர்களை போலீசார் தாக்குவது தொடர்ந்து தொடர் கதையாக மாறி வருகிறது.

தமிழகத்தில், பெங்களூர், ஹைதரபாத் போன்ற மிக முக்கியமான இடங்களில் டிராபிக் போலீசார் பலர், பொதுமக்களை தாக்கும் வீடியோக்கள், அவதூராக பேசும் வீடியோக்கள், பணம் பறிக்கும் வீடியோக்கள் ஆகியவையும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது இரண்டு தினங்களாக பெங்களூர் டிராபிக் போலீஸ் ஒருவரின் வீடியோ கடுமையாக எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. அந்த வீடியோவில்,   பெங்களூர் பிரதான சாலை ஒன்றில்,  பைக்கில் செல்லும் இளைஞர்கள் இருவர்  ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.

அப்போது அவர்கள் சிக்னல் அருகில் டிராபிக் போலீஸ் இருப்பதைக் கண்டு, வண்டியை நிறுத்தாமல் வேகமாக கடந்து செல்ல முயற்சிக்கின்றனர். அதைப் பார்த்து கடுப்பான டிராபிக் போலீஸ் ஒருவர்,  கோபத்தில், தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி அவர்களை தாக்குகிறார்.

இந்த காட்சிகளை அதே சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், வீடியோ எடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வீடியோ வைரல் ஆனது. உள்ளூர் ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்த வீடியோ ஒளிப்பரப்ப பட்டு வருகிறது.

 

 

 

×Close
×Close