Advertisment

பெங்களூரு சாலையில் வீலிங் சாகசம்; மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டியை தூக்கி வீசிய பொதுமக்கள்: வைரல் வீடியோ

பெங்களூருவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்தவர்கள் மீது கோபமடைந்த பொதுமக்கள் அவர்களின் ஸ்கூட்டியைப் பறித்து மேம்பாலத்தில் இருந்து கீழே வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
angry commuters on

ஒரு கும்பல் இரண்டு ஸ்கூட்டர்களை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. (Image source: @ShreyasJourno/X)

பெங்களூருவில் பரபரப்பான சாலையில் பல நபர்கள் வீலிங் ஸ்டண்ட் செய்ததால் கோபமடைந்த பயணிகள் பெங்களூரு நெலமங்களா மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டர்களை வீசினர். இதையடுத்து, மேம்பாலத்தில் இருந்து வாகனங்களை வீசியவர்கள் மீது மாடநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Watch: Angry commuters throw scooters off Bengaluru flyover to stop wheeling stunts, video goes viral

ஒரு கும்பல் இரண்டு ஸ்கூட்டர்களை மேம்பாலத்தில் இருந்து தூக்கி எறிவது இந்த வைரல் வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவை சாலையில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பத்திரிகையாளர் ஷ்ரேயாஸ் எச்.எஸ், “நெலமங்களா போக்குவரத்து காவல் எல்லையில், இரு சக்கர வாகனத்தில் வீலிங் சாகத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் 2 ஸ்கூட்டர்களை மேம்பாலத்தில் இருந்து வீசினர்” என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு கும்பல் இரண்டு ஸ்கூட்டர்களை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிய வீடியோவைப் பாருங்கள்:

ஆகஸ்ட் 17-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 46,000 பார்வைகளைக் குவித்தது. இந்த வீடியோ குறித்து சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவிக்கையில், சாலைகளில் பொறுப்பில்லாமல் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்களைக் குறை கூறினர். இருப்பினும், மேம்பாலத்தில் இருந்து தூக்கி எறிந்து ஸ்கூட்டர்களை சேதப்படுத்திய கும்பலை பலர் விமர்சித்தனர். அதற்கு பதிலளித்த ஒரு பயனர், “நல்லது. இந்த ஸ்டண்ட் டிரைவர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். 
மற்றொரு பயனர் கருத்து, “இது தவறு. அவர்களிடமிருந்து ஸ்கூட்டரின் விலையை வசூலிக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

“இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க சிறந்த வழி இது. மற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை. சாலையே தங்களுடைய சொத்து என்பது போல அவர்கள் நடந்து கொள்கிறார்கள்” என்று மூன்றாவது பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

இன்னொரு பயனர், “இந்த நாடு உங்களை ஒருபோதும் கும்பல் நீதியிலிருந்து தப்பிக்க விடாது” என்று மற்றொரு பயனர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment