அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களின் தனித்துவமான பாங்க்ரா நிகழ்ச்சியில், ‘ஒய் திஸ் கொல வெறிடி’ தமிழ் பாடலுக்கு பாங்க்ரா நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங் மாவட்டத்தில் நடந்த நிகழ்சியில், இந்திய ராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தமிழ் பாடலுக்கு பாங்க்ரா நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங் மாவட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சமீபத்திய வருகையின்போது அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பாக்ரா இசை நிகழ்ச்சியில், சீக்கிய ராணுவ வீரர்கள்,‘ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறிடி’ என்ற பாடலுக்கு பாங்க்ரா இசையுடன் நடனம் ஆடினார்கள்.
தமிழ் பாடலுக்கு பாங்க்ரா நடனம் ஆடப்பட்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஸ்மிருதி இரானி, “அருணாச்சல பிரதேசத்தில் தமிழ் பாடலுக்கு பாங்க்ரா நடனம்… இதைத்தான் நாங்கள் ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்’ என்கிறோம். சீக்கிய ரெஜிமென்ட் @adgpiக்கு நன்றி!” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த வீடியோவை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை ட்வீட் செய்தார்.
“பல்லே பல்லே! இந்தியாவின் பன்முகத்தன்மையை இப்படித்தான் கொண்டாடுகிறோம்! கலாச்சாரம், நிறங்கள், ஆற்றல் & ஒய் திச் கொலவெறி டி! அருணாச்சலப் பிரதேசத்தில் சீக்கியப் படைப்பிரிவின் ஜவான்களின் தனித்துவமான பாங்க்ரா நிகழ்ச்சி! @adgpi,” என்று பூரி பதிவிட்டுள்ளார்.
“வடகிழக்கு மாநிலத்தில் ஒரு தமிழ் பாடலின் இசைக்கு பாங்க்ரா இசைக்கப்படுவதை எப்போதாவது பார்த்தீர்களா? இது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்பதற்கு இந்த வீடியோவே சான்று. நம்பமுடியாதது!” என்று ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசின் 75 ஆண்டு சுதந்திரம் மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்குமான ஒரு முயற்சி என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“