Advertisment

பாரத் பந்த்: பீகாரில் தடியடியில் பாட்னா சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் மீது போலீஸ் தவறுதலாக தாக்குதல்; வைரல் வீடியோ

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Bharath Bandh

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வைரல் வீடியோ (Image source: @SachinGuptaUP/X)

பட்டியல் இனத்தவர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவுகளில், உட்பிரிவுகளை உருவாக்க மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பீகாரின் பாட்னாவில் இருந்து ஒரு போலீஸ்காரர் தவறுதலாக சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை (எஸ்.டி.எம்) தடியடியால் தாக்கிய வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Bharat Bandh: Cop accidentally hits Patna SDM during lathicharge in Bihar, video goes viral

இந்த வைரல் வீடியோவில், தெருக்களில் பதற்றத்துடன் மக்கள் ஓடும் ஒரு குழப்பமான காட்சியுடன் தொடங்குகிறது. போலீசார் மற்றும் ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தும்போது, ​​அவர்களில் ஒருவர் மிருதுவான வெள்ளை சட்டை மற்றும் பேன்ட் அணிந்திருந்த சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட்-ஐ தடியால் தவறுதலாகத் தாக்கினார். எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒரு பயனர், “பாட்னாவில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியபோது, சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் மீது தடியால் தாக்கினர். இது சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட்டு-க்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பீகாரில் போலீசார் நடத்திய வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆர்வத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக பலர் கருதுகின்றனர்.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஒரு எக்ஸ் பயனர்,  “இந்த போலீஸ்காரர் அவரை வேண்டுமென்றே தாக்கியதாக நான் நினைக்கிறேன்” என்று எழுதியுள்ளார். மற்றொரு பயனர்,  “கவனமாகப் பாருங்கள், அவர் வேண்டுமென்றே தாக்கியுள்ளார், அவர் இப்போது தனது வேலையை இழப்பார்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

“உங்களையே அடித்துவிட்டார்களா?” என்று மற்றொரு பயனர் கேட்டுள்ளார்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இது அமைதியான போராட்டம் அல்ல, சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாது என்பதால் போலீசார் லேசான பலத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது என்று கூறினார். பி.டி.ஐ செய்தி நிறுவனம், “மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, சில மாவட்டங்களில் கடைகள் மற்றும் பள்ளிகள் மட்டும் மூடப்பட்டிருந்தன.” என்று குறிப்பிட்டுள்ளது.

தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NACDAOR) கருத்துப்படி,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரின் அரசியலமைப்பு உரிமைகளை அச்சுறுத்துகிறது. அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலம் பாதுகாக்கப்படும் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இடஒதுக்கீடு குறித்த புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்த அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment