New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-43.jpg)
big boss sandy master family
கலாய்த்து விளையாடுவார். ஆனால் மனதில் எதும் வைத்துக் கொள்ளமாட்டார்
big boss sandy master family
big boss sandy master family :பிக் பாஸ் 3 சீசனில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்படும் போட்டியாளராக இருப்பவர் சாண்டி மாஸ்டர் தான்.
கடந்த 2 சீசனிலும் இறுதி நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் கலக்கிய நடனம் தான் இதற்கு மிக முக்கிய காரணம். வீட்டில் இருப்பவர்களை கலாய்த்து ஆடியது போதும் "நீ வீட்டுக்கு போ" என அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து கிண்டல், நடனம், குத்து பாட்டு, கானா பாட்டு, என கவினுடன் சேர்ந்து கலக்கி வருகிறார் சாண்டி மாஸ்டர். இவரை பாடும்படி கமலே நேயர் விருப்பமாக கேட்டுள்ளார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இதற்கு முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட காஜல் பசுபதி, சாண்டியின் முன்னாள் காதலி ஆவர். சாண்டி பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற முதல் நாளிருந்து அவருக்கு சமூகவலைத்தளங்களில் மிகப் பெரிய ஆதரவுகளை திரட்டி வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் எத்தனையோ விதமான எதிர்மறைகளை பதிவு செய்த போதும் தொடர்ந்து சிக்சர்களாக விளாசினார் காஜல்.
பிக் பாஸ் வீட்டில் மதுமிதா, சேரன், கஸ்தூரி போன்ற போட்டியாளர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது சாண்டி மாஸ்டர் மற்றவர்கள் சோகத்தில் இருந்தாலும் கலாய்ப்பது தான். அவர்களை இது மேலும் காயப்படுத்தும் என எத்தனையோ முறை இதுப்பற்றி மதுமிதா சாண்டி மாஸ்டரிடம் சண்டை போட்டுள்ளார். கமலிடமும் பஞ்சாயத்து செய்துள்ளார்.
ஆனால், சமீபத்திய எபிசோட்டில் சாண்டி மாஸ்டரின் மனைவி, மாமியார், அவர் மனைவியின் தங்கை ஆகியோர் சாண்டி நிஜ வாழ்க்கையிலும் இப்படி தான். எல்லாரையும் பாரப்பட்சம் பார்க்காமல் கலாய்த்து விளையாடுவார். ஆனால் மனதில் எதும் வைத்துக் கொள்ளமாட்டார் என கூறி இருந்தனர்.
அதை உறுதி செய்யும் விதமாக அவர், தனது குடும்பத்துடன் டிக் டாக்கில் கலக்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.