Social-media-viral | viral-news | bigg-boss-tamil: 18 போட்டியாளர்கள் களமாடியுள்ள பிக்பாஸ் 7வது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நடப்பு சீசனில் சினிமா பிரபலங்கள், டிஜிட்டல் முகங்கள் என பல புதியவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் விதவிதமான ட்விஸ்ட் மற்றும் ரூல்ஸ்களுடனும் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நிகழச்சியில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். 'அடிப்படை கல்வி அவசியம்' என மற்றொரு போட்டியாளரான நடிகை விசித்ரா கூறியதற்கு ஜோவிகா எதிர்ப்பு தெரிவிதார். தனக்கு படிப்பு வராததால் தான் பிடித்ததை செய்வதாகவும் கூறி வாக்குவாதம் செய்தார்.
ஜோவிகாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமச்சித்து வருகிறார்கள். ஜோவிகா பேசியது தொடர்பாக பரபரப்பான விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், நடிகை விசித்ரா - ஜோவிகா விஜயகுமார் ஆகிய இருவரின் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் 'நீயா நானா' கோபிநாத் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், படிக்காதவன் தான் சாதிக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என 10 பேரை சொல்வார்கள். படிக்காமல் வெற்றி பெற்றவர்கள் 10 பேரை நீங்கள் சொன்னால், படிப்பால் வெற்றி பெற்றவர்கள் 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். அதனால், படிப்பு ரொம்பவும் முக்கியம். உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் ஒரு வருஷத்தில் நீட் தேர்வில் நம்ம பையன் தான் டாப்பில் வருவான். படிக்காமல் வெற்றி பெற்றவர்கள் லிஸ்டில் நம்ம ஃபர்ஸ்ட் சொல்வது காமராஜரை தான். அவர் படிக்காதவராக இருந்தாலும் அவர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். படிக்காத என்னாலே இவ்வளவு செய்ய முடியும் போது படித்தவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று காமராஜர் கண்ட கனவினால் தான் இன்று இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள். தான் இருந்தாலும் பிள்ளைகளை படிக்க வேண்டும் என்கிற பெற்றோர்கள் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
சோசியல் மீடியாவில் படிப்பு ஒண்ணுமே கிடையாது என்று சொல்றவனை நம்பாதீங்க. அவனெல்லாம் மக்கு பையன். படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்டதில்லை. படிப்பு தான் சமூக நீதியை சொல்லிக் கொடுக்கிறது. படிப்பு ஒரு ஆயுதம்' என்று ஆக்ரோஷமாக கோபிநாத் பேசிய வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“