Advertisment

போற இடத்தில் எல்லாம் இப்படி பண்ணா எப்படி? பிக் பாஸ் ஜூலி வைரல் வீடியோ!

ஓவியா ஓவியா என கத்தி அரங்கம் அதிர கூச்சலிட்டனர். இதனால், பேச முடியாமல் ஜூலி தவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss julie viral college function video

bigg boss julie viral college function video

bigg boss julie viral college function video :ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது.

Advertisment

செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய  ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி.

இந்த படத்தில் ஜூலி அம்மனாக நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் அம்மன் தாயில் ரிலீஸூக்காக வெயிட்டிங். இதற்கிடையில் ஜூலி கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

ஏற்கனவே ஜூலி கலந்துக் கொண்ட கல்லூரி நிகழ்ச்சி வீடியோ இதோ

இந்நிலையில் பிரபல கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது மாணவர்களிடம் மைக் பிடித்து பேசிய அவரை அங்கிருந்த மாணவர்கள் ஓவியா ஓவியா என கத்தி அரங்கம் அதிர கூச்சலிட்டனர். இதனால், பேச முடியாமல் ஜூலி தவித்தார்.

ஓவியா ஆர்மி இன்னும் பயங்கரமாக கூச்சலிட,நீங்க என்ன கத்தினாலும் எதுவும் நடக்கப் போறதில்லை என்று ஜூலி கூறினார். மேலும் நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போடவில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை என்ற கருத்தை பதிவு செய்துவிட்டு தொடர்ந்து பேச முயற்சித்தார். ஆனால் அவரை கடைசி வரை மாணவர்கள் பேச விடவில்லை. சில நொடிகள் மட்டும் பேசிவிட்டு மேடையில் இருந்து வெளியேறினார் ஜூலி.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையும் ஜூலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Tamil Julie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment