கொடிய விஷப்பாம்பு கடித்தும் அஞ்சாத நபர்; கையில் பாம்புடன் மருத்துமனைக்கு சென்ற நபர்: வைரல் வீடியோ

Viral Video: பீகார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் மண்டல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

Viral Video: பீகார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் மண்டல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
man with snake

பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் மண்டல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. (Image source: @Mukesh_Journo/X)

பீகார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல் (48 வயது), இவரை செவ்வாய்கிழமை மாலை, உலகின் மிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான ரசல்ஸ் விரியன் பாம்பு கடித்துள்ளது. மண்டல், வேகமாக பாகல்பூரின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பாம்பு "கடித்ததற்கான ஆதாரமாக" கையுடன் பாம்பையும் பிடித்துக் கொண்டு சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தினக்கூலி தொழிலாளியான பிரகாஷ் மண்டல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்தது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாம்பு கடித்ததும் பிரகாஷ் மண்டல் உடனடியாக அந்த பாம்பின் இனத்தை கண்டறிந்து தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் உதவுவார்கள் என்று கையோடு அந்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

Advertisment
Advertisements

பிரகஷ் மண்டல் பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு, கையில் அதன் தலையைக் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழையும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. ஒருவர் பிரகாஷ் மண்டலின் கையைப் பிடித்து அழைத்து செல்கிறார். பிரகாஷ் மண்டல் பின்னர் அந்த பாம்பை கையில் பிடித்தபடி, மருத்துவமனையில் தரையில் படுத்துக்க்கொள்கிறார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் இந்தக் காட்சியைப் தங்கள் மொபைல் போனில் படம் பிடிக்கிறார்கள். 

சமூக வலைதளத்தில் 7,41,000 பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ, பல நெட்டிசன்களின் கருத்துகளைப் பெற்றுள்ளது. ஒரு எக்ஸ் பயனர் எழுதினார்,  “சகோதரரே, இந்த பாம்பு ரஸ்ஸல் வைப்பர், இதில் கொடிய விஷம் உள்ளது, எனவே இதுபோன்ற முட்டாள்தனங்களை ஊக்குவிக்க வேண்டாம்.” அறிவுறுத்தியுள்ளார்.

மற்றொரு பயனர், “இது பீகார், சகோ, இங்கே மக்கள் பறக்கும் பறவைகளுக்கு மஞ்சள் தடவுகிறார்கள், பிறகு எப்படி பாம்பு கடித்துவிட்டு ஓடத் துணியும்?” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது பயனர், “சகோ, சிலர் பயத்திலேயே இறந்துவிடுகிறார்கள். குறைந்த பட்சம் இந்த மனிதனின் தைரியத்தை ஒப்புக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், ஆந்திராவில் குடிபோதையில் ஒரு மனிதனின் மீது ராட்சத மலைப்பாம்பு ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. போதையில் இருந்த நபர் வெளியில் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலான வீடியோவில், குடிபோதையில் டிரைவர் எதுவும் செய்யவில்லை. அதே நேரத்தில் உள்ளூர்வாசிகள் பீதியடைந்து அவரை பாம்பிடம் இருந்து மீட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: