மகளிர் தின 2018 இணைய ஹைலைட்: விதவிதமான பொட்டுக்களுடன் பிரபலங்கள் செல்ஃபி!

கருப்பு, சிவப்பு, பச்சை பல வண்ணங்களில், டிசைன் டிசைன் பொட்டுக்களுடன் அவர்கள் கொடுக்கும் போஸ்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன

நாடு முழவதும் 2018 ஆம் ஆண்டிற்கான மகளிர் தினம் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் இணையதள பெண்கள் பலர் புதிய பாணி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். #bhindhitwitter என்ற பெயரில் இணையத்தை தெறிக்க விட்டு வைக்கின்றனர்.

சமீப காலமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், பெண்கல் ஒரு சேராக புதுமையான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதை பிரபலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் #GirlsWhoDrinkBeer, #NosePinTwitter, #SuitTwitter போன்ற ஹாஸ்டேக்குகள் அதிகளவில் வைரல் ஆகின.

 

அதனைப்போன்று, தற்போது பிந்தி ஹாஷ்டேக்கும் வைரல் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் விதவிதமான பொட்டுக்களுடன் தங்கள் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றன. கருப்பு, சிவப்பு, பச்சை பல வண்ணங்களில், டிசைன் டிசைன் பொட்டுக்களுடன் அவர்கள் கொடுக்கும் போஸ்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சில பாலிவுட் பிரபலங்களும் இணைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

×Close
×Close