கடைசி நேர சமயோசிதம்... காட்டுக்குள் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட பெண்! வீடியோ

சுற்றுலா சென்ற இடத்தில் காட்டெருமை அருகே சென்ற பெண்ணை காட்டெருமை துறந்த அதனிடம் இருந்து அந்த பெண் சமயோசித புத்தியால் உயிர் பிழைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சுற்றுலா சென்ற இடத்தில் காட்டெருமை அருகே சென்ற பெண்ணை காட்டெருமை துறந்த அதனிடம் இருந்து அந்த பெண் சமயோசித புத்தியால் உயிர் பிழைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bison charged a woman, woman escaped from bison chaged, woman escaped by her intelligent, viral video, காட்டெருமையிடம் இருந்து தப்பிய பெண், வரைல் வீடியோ, டிரெண்டிங் வீடியோ, tamil viral news, tamil viral video news, bison chase woman, trending video

சுற்றுலா சென்ற இடத்தில் காட்டெருமை அருகே சென்ற பெண்ணை காட்டெருமை துறந்த அதனிடம் இருந்து அந்த பெண் சமயோசித புத்தியால் உயிர் பிழைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

பலரும் விலங்கியல் பூங்காக்களுக்கு சுற்றுலா செல்லும் இடங்களில் தாங்கள் தைரியமான நபர் என்பதைக் காட்டிக்கொள்ள விலங்குகளுக்கு மிக அருகே சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்வது உண்டு. அந்த சமயங்களில் எப்படியோ சமயோசிதமாக செயல்பட்டு உயிர் பிழைத்த சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த வகையில், இந்திய வனத்துறை அதிகாரி வீடியோ ஒன்று காட்டெருமையின் துறத்தலில் சிக்கிய பெண் ஒருவர் சமயோசித புத்தியால் உயிர் பிழைத்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சுற்றுலா சென்ற இடத்தில் காட்டெருமை அருகே சென்ற ஒரு ஆணும் ஒரு பெண்ணும் செல்கின்றனர். அப்போது அவர்களைப் பார்த்து மிரண்ட காட்டெருமை ஒன்று அவர்களை மூர்க்கமாக துரத்துகிறது. அந்த பெண்ணுடன் இருந்த நபர் வேகமாக ஓடிவிட அந்த பெண் ஓட முடியாமல் கீழே விழுந்து விடுகிறார். துரத்தி வந்த காட்டெருமை அவர் அருகே சென்று தாக்குவதற்கு தலை குனிந்து பார்க்கிறது. அந்த பெண் அசையாமால் அப்படியே படுத்து கிடக்கிறார். இதனைப் பார்த்ஹ்ட அங்கே இருந்த பார்வையாளர்கள் அந்த பெண்ணை இன்னும் அப்படியே படுத்து இருக்கச் சொல்லி அறிவுறுத்தினர். சிறிது நேரம் அங்கே இருந்த அந்த காட்டெருமை பின்னர் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறது.

Advertisment
Advertisements

அந்த பெண், கடைசி நேர சமயோசித புத்தியால் காட்டெருமையிடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

இந்த வீடியோ குறித்து, சுஸந்த நந்தா குறிப்பிடுகையில், “யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் ஒரு பெண்ணை காட்டெருமை ஒன்று தாக்க வந்ததால், பயந்துபோன பார்வையாளர்கள் அந்த பெண்ணை இன்னும் தரையில் படுக்குமாறு அறிவுறுத்தினர்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Social Media Viral Video Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: