/tamil-ie/media/media_files/uploads/2020/04/bison1.jpg)
bison struggling to escape from lions video, bison escape from crocudile video, முதலையிடம் இருந்து தப்பிய காட்டெருமை, சிங்கங்களிடம் இருந்து தப்பிய காட்டெருமை, காட்டெருமை வைரல் வீடியோ, சிங்கங்களிடம் இருந்து உயிர் தப்பிய காட்டெருமை வைரல் வீடியோ, bison escape from lions viral video, bison video goes viral, bison viral video, bison fighting video, tamil video news, tamil viral video news, animal viral video news, bison video news
விலங்குகள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது உயிர் பிழைப்பதற்காக உச்சபட்ச வலிமையுடன் போராடுவது இயல்பானதுதான். தண்ணீரில் முதலை, கரையில் சிங்கங்கள் எப்படி சென்றாலும் ஆபத்து குரல்வலையைப் பிடித்துவிடும் என்ற நிலையில் ஒரு காட்டெருமை உயிர் பிழைக்க எப்படி போராடுகிறது என்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வனத்தில் சிங்கம், புலி போன்ற வேட்டை விலங்குகள், மான், காட்டெருமை போன்றவற்றை வேட்டையாடுவது உயிரியல் உணவுச் சங்கிலியில் இயல்பாக அமைந்துவிட்ட ஒன்று. பலரும் டிஸ்கவரி, நேஷ்னல் ஜியோ கிராஃபி போன்ற டிவி சேனல்களில் காட்டு விலங்குகளின் வாழ்க்கை, சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் வேட்டையாடுவதையும் காண்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
வேட்டை விலங்குகள் சிங்கம், புலி ஆகியவை வேட்டையாடுவதை பார்க்கும்போது அடையும் அதே த்ரில்லிங் உணர்வை வேட்டை விலங்குகளிடம் இருந்து இரையாகும் விலங்குகள் தனது போராட்டத்தால் தப்பி உயிர் பிழைக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும்போதும் அடைகின்றனர்.
அப்படி, ஒரு காட்டெருமை கரையில் சிங்களிடமும் தண்ணீரில் முதலையிடமும் மீண்டும் கரையேறி சிங்கங்களிடம் சிக்கி எப்படி போராடுகிறது என்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
WOW ???????????? pic.twitter.com/dbqlSg4UpH
— The Dodo (@dodo) April 17, 2020
இந்த வீடியோவில், ஒரு சிற்றாறு ஓடும் காட்டில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருக்கும்போது திடீரென சுற்றி வளைக்கும் சிங்கங்களிடம் சிக்கிக்கொள்கிறது. சுற்றிவளைத்த சிங்கங்களை துரத்தி சமாளிக்கிறது. காட்டெருமையின் துணிவைக் கண்டு புறமுதுகிட்டோடும் சிங்கங்கள் மீண்டும் கூட்டமாக ஒன்று சேர்ந்து காட்டெருமையை சுற்றி வளைக்கின்றன. அதற்குள் அவற்றிடம் இருந்து தப்பி சிற்றாறுக்குள் இறங்கும் காட்டெருமை வேகமாக நீந்தி ஆற்றுக்குள் செல்கிறது. சிங்கங்களிடம் இருந்து தப்பியாகிவிட்டது என்று காட்டெருமை நிம்மதி பெருமூச்சு விடும்போது ஆற்றில் எங்கிருந்தோ திடீரென ஒரு பெரிய முதலை காட்டெருமையைக் குறிவைத்து வேகமாக வருகிறது. முதலை மிக ஆக்ரோஷமாக காட்டெருமையின் கழுத்தை குறிவைத்து பாய்கிறது. ஆனாலும், காட்டெருமை முதலையின் தாக்குதலில் இருந்து தப்பி தண்ணீரில் வேகமாக நீந்துகிறது. ஆனாலும், முதலை விடாமல் தொடர்ந்து துரத்துக்கிறது. எப்படியோ தனது வலிமையால் முதலையிடம் சிக்காமல் வேகமாக நீதி கரையை அடையும் காட்டெருமை தப்பித்துவிட்டோம் என்று பார்த்தால் இக்கரையிலும் சிங்கங்கள் சுற்றி நிற்கின்றன.
மீண்டும் தண்ணீருக்குள் போக முடியாது என்பதால் துணிந்து கரையேறும் காட்டெருமை, சுற்றி வளைக்கு சிங்கங்களுக்கு இரையாகமல் அவற்றை எதிர்த்து பாய்ந்து துரத்துகிறது. ஒரு சிங்கத்தை துரத்திச் சென்றால் மற்றோரு சிங்கம் பின்னால் பாய்ந்து தாக்க வருகிறது. உடனடியாக அந்த சிங்கத்தையும் சமாளித்து சுற்றி வருகிறது அந்த துணிச்சல் மிக்க காட்டெருமை. ஒரு கட்டத்தில் சிங்கங்கள் கூட்டமாக ஒற்றை காட்டெருமையை வேட்டையாட சுற்றிவளைக்கின்றன. முடிந்தது காட்டெருமை கதை என்று நினைக்கும்போது, காட்டெருமையின் உயிரிவாழும் போராட்டத்துக்கு கிடைத்த பலனாக 4- 5 காட்டெருமைகள் கூட்டமாக அந்த ஒற்றை காட்டெருமைக்கு ஆதரவாக பாய்ந்து வருகின்றன.
காட்டெருமைகள் கூட்டமாக வருவதைப் பார்த்த சிங்கங்கள் பயந்துபோய் புறமுதுகிட்டு ஓடுகின்றன. இறுதியில் காட்டெருமை உயிர் தப்பியது.
விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் இப்படியான நெருக்கடியான காலம் வரும்போது உயிர்வாழ கடைசி வரை போராட வேண்டும் என்பதை உணர்த்தும்படியாக அமைந்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.