மிளகாய் ஐஸ்கிரீம் முதல் ஓரியோ பக்கோடா வரை… 2021ஐ கலக்கிய விநோத உணவுகள்

ரசகுல்லா சாட், மிளகாய் ஐஸ்கிரீம்,மேகி மில்க் ஷேக் என பல வித்தியாசமான உணவுகள் இந்தாண்டில் அறிமுகமாகியுள்ளன. இந்த உணவு வகைகளுக்கு உங்களது ரியாக்‌ஷன் என்னனு கீழே Comments-ஐ பதிவிடுங்க

வித்தியாசமான உணவுகளுக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக 2021 மாறிவிட்டது. கொரோனாவால் வீட்டில் முடங்கிய பலரும், தங்களது திறமைகளை உணவில் களமிறக்க தொடங்கினர்.

யோசித்துக்கூட பார்க்க முடியாத பல வகையான காம்பினேஷன்களை அறிமுகப்படுத்தி, இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்து எப்படி டா இத சாப்பீடுறாங்க என பலர் நினைத்தாலும், அதனை முயற்சி செய்து வீடியோ போட்ட கூட்டமும் உள்ளது.

ஹோட்டல், துரித உணவுகளை நடத்தி வருவோரும் தொழில் போட்டி காரணமாக தங்கள் படைப்புகளில் வித்தியாசத்தை புகுத்தி வருகிறார்கள். இதை பார்க்கும் போது, இந்த உணவில் இதை சேர்க்கலாமா என வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஆகிறது. அப்படி, சமூக வலைதளத்தில் ஹிட் அடித்த விநோத உணவுகளை இச்செய்தி தொகுப்பில் பாருங்கள்

ஃபேன்டா மேகி

மேகிக்கு இந்தியாவில் எப்போதும் தனி மவுசு உண்டு. இன்ஸ்டான்ட் நூடுல்ஸ் மீதான காதலால், அதில் புதுமையை புகுத்துகிறேன் என்ற பெயரில் பல விநோத காம்பினேஷன்களை இணையத்தில் இந்தாண்டு பார்த்தோம். வெல்லத்தால் செய்யப்பட்ட மேகி லட்டு, மேகி மில்க் ஷேக், மேகி ஐஸ்கிரீம் வித் ஓரியோ போன்றவை ஹிட் அடித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஃபேன்டா மேகி என்னும் உணவின் வீடியோவை கண்டு உணவுப்பிரியர்கள் ஒருநிமிடம் திகைத்து போனது தான் உண்மை.

ஓரியோ பக்கோடா

மொறு மொறு பக்டோவில் புதுமையை புகுத்தும் நோக்கில் அறிமுகமான ஓரியோ பக்டோ காணொலி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. க்ரீம் கொண்ட சாக்லேட் குக்கீஸை, பெசன் மாவுடன் சேர்ந்து அதனை வறுத்தெடுக்கும் வீடியோவை ஃபுட் பிளாக்கர் ஒருவர் அப்லோட் செய்திருந்தார். ஓரியோ பிஸ்கட் ரசிகர்கள், இந்த பக்டோவை கண்டு வாயடைத்து போனார்கள்.

பிரவுனி பான் பீடா

திருமணம் அல்லது ஹோட்டகளில் சாப்பிட்டவுடன், பான் பீடா போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அப்போது தான், திருப்திகரமாக உணர்வார்கள் ஆனால் ஒரு சிலரே சாப்பிடுவதால், இளைஞர்களை கவரும் நோக்கில் பான் பீடா வித் ஐஸ்கிரீம் அண்ட் பிரவுனியை அகமதாபாத்தில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த உணவும் ஃபுட்டீஸ் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரசகுல்லா சாட்

இந்தாண்டின் மிகவும் அதிர்ச்சியூட்டும் உணவுப் பரிசோதனைகளில் ரசகுல்லா முக்கிய இடம் பிடித்துள்ளது. புதுமை என்ற பெயரில், டெல்லி கடைக்காரர் ஒருவர், ரசகுல்லாவுடன் தயிர், உலர் பழங்கள், புளிப்பு சட்னி என பலவற்றை இணைத்து வித்தியாசமான சாட்டை அறிமுகப்படுத்தினார்.

மிர்ச்சி ஐஸ்கிரீம் ரோல்

நுடெல்லாவுடன் சுவையான ஐஸ்கிரீம் ரோல்ஸ் சாப்பிட்டால் பலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். அவ்வளவு சுவையான அந்த டிஷூடன், இந்தூர் கடைக்காரர் ஒருவர், பச்சை மிளகாயை கட் செய்து சேர்த்து கொடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெஸ்டியான ஐஸ்கீரம் சார்பிட்ட நிலையில், மிர்ச்சி உள்ள கார ஐஸ்கிரீம் உணவு பிரியர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

பட்டர் சிக்கன் பானிபூரி

இன்றுவரை, இந்தியர்களின் விருப்பமான சாலையோர உணவாக பானிபூரி திகழ்கிறது. அத்தகைய பானிபூரியில் பட்டன் சிக்கன் கலந்து சாப்பிடும் புகைப்படம், இந்தாண்டு வைரலானது.

சீஸி சாக்லேட்-கார்ன்

மசாலா ஸ்வீட் கார்ன் மழை மற்றும் குளிர்கால காலத்தில் நல்ல விற்பனையாகும். அத்தகைய ஸ்பெஷல் மசாலா கார்னில், டெல்லி கடைக்காரர் ஒருவர் ஸ்வீட் சேர்க்கும் நோக்கில், சாக்லெட்டை சாஸை முதலில் கார்னில் கலந்தார்.

அத்துடன் விட்டால் பரவாயில்லை. ஆனால், அதன்பின்பு, வெண்ணெய் மற்றும் மசாலாவை சேர்ந்து அதன் மீது முழுவதும் தடவி விற்பனை செய்கிறார். இந்த சீஸி சாக்லேட்-கார்னுக்கு உங்களின் ரியாக்ஷன் என்னனு சொல்லுங்க

குரோசண்ட் வடா பாவ்

மும்பையில் சாலையோர கடைகளில் வடா பாவ் மிகவும் விருப்பமான உணவாகும். அத்தகைய பிரபலமான வடா பாவ்வில், பிரெஞ்சு ஸ்டைலில் பாவ்வுக்கு பதில் குரோசண்ட் வைத்து விற்பனை செய்கிறது.

மாம்பழ ஐஸ்கிரீம் சாட்

குஜராத்தின் டபேலி சாட், மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். ஆனால், ஃபுட் பிளாக்கர் ஒருவர், பிரட்வுடன் சாஸ் ஊற்றிவிட்டு, அதன் மேல் மாம்பழ மிலிக் ஐஸ் கீரிமை சேர்க்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இறுதியாக அதன மீது வெண்ணெய்யை முழுவதுமாக தூவியது பார்ப்போரை முகம் சுழிக்க வைத்தது.

என்ன மக்களே, இந்தாண்டின் விநோதமான உணவுகளை தான் இவ்வளவு நேரம் பார்த்திங்க. இத பார்த்த, அடுத்தாண்டு என்ன மாறி உணவுலாம் வரபோகுதோ… பார்க்க ரெடியா இருப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bizarre food trends that left foodies flabbergasted this year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com