காங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட பாஜக கவுன்சிலர்; பரபரப்பு வைரல் வீடியோ

இந்திய அரசியலில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் இரு துருவங்களாக செயல்பட்டுவரும் நிலையில், மகாராஷ்டிராவில் மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

BJP councillor kiss Congress councillor, BJP councillor kiss Congress councillor in Maharashtra, காங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட பாஜக கவுன்சிலர், வைரல் வீடியோ, கோல்ஹாப்பூர் மாநகராட்சி, BJP councillor kiss Congress councillor in Kolhapur municipal corporation meeting, viral video, Kolhapur municipal corporation councillor kissing

மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சிப்பதோடு போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இதனால், இந்திய அரசியலில் பாஜகவும் காங்கிரஸும் இரு துருவங்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர் மாநகராட்சியில் அண்மையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

கோல்ஹாப்பூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் மேயராக உள்ளார். இதனால், கோல்ஹாப்பூர் மாநகராட்சியில் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தின்போது, பாஜக கவுன்சிலர் கமலாகர் போபலே, காங்கிரஸ் கவுன்சிலர் ஷரங்தர் தேஷ்முக்கின் முகத்டில் திடீரென முத்தமிட்டார்.

இருவருக்கும் இடையே நடைபெற்றா உரையாடலுக்குப் பிறகு, அவர் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பல பெண் கவுன்சிலர்கள் இருந்த நிலையில், பாஜக கவுன்சிலர் காங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட சம்பவம் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாக பரவிவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp councillor kiss congress councillor in maharashtra viral video

Next Story
வவ்வால் சாப்பிடும் சீனப்பெண்! இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா? (வைரல் வீடியோ)chinese women eating bat viral video corona virus - வவ்வால் சாப்பிடும் சீனப்பெண்! இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா (வைரல் வீடியோ)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com