உயிருடன் இருக்கும் நடிகை இறந்து விட்டதாக செய்தி பரப்பிய பாஜக எம்எல்ஏ.. வறுத்தெடுத்த ரசிகர்கள்!

புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே இறந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் எம்எல்ஏ ராம் கதம்.

சர்ச்சை எம்எல்ஏ ராம் கதம்:

பாஜக எம்எல்ஏக்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி சர்ச்சை மன்னம் என்று அழைக்கப்படுபவர் தான் எம்எல்ஏ ராம் கதம். சமீபத்தில்நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இவர் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்கள் மத்தியின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இளைஞர்களை ஆதரிக்கும் வகையில் ராம் கதம் கூறிய கருத்து இதுதான்,”இளைஞர்களே காதலிப்பது தவறில்லை.. உங்களுக்கு எந்த பெண்களை பிடிக்கிறதோ அவர்களை காதலியுங்கள். நீங்கள் விரும்பும் பெண்களை கடத்தி உங்களின் ஒப்படைப்பது என்னுடைய பொறுப்பு” என்று கூறியிருந்தார்.

ராம கதவின் இந்த பேச்சு பலரது கண்டனங்களை பெற்றிருந்தது. சமூகவலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோ வைரலாகவும் பரவியது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் ராம் கதம்.

 

பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. புற்று நோய் சிகிச்சை காரணமாக அவர் தனது முடிகளை நீக்கி மொட்டை அடித்துக் கொண்டது போன்ற பல வீடியோக்கள் அண்மையில் வெளியாகின.

ரசிகர்கள் பலரும் சோனாலி பிந்த்ரேக்கு தங்களின் ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், எம்எல்ஏ ராம் கதம், தன்னுடிஅய டிவிட்டர் பதிவில், “இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த பதிவு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சோனாலியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. உயிருடன் இருப்பவரை எப்படி சாகடிக்கலாம்? என்று ராம் கதவை பலரும் விமர்சிக்க தொடங்கினர். இதைப்பார்த்த ராம் கதம் உடனடியாக தனது பதிவை நீக்கினார்.

பின்பு, நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரின் ஆரோக்கியமான உடல்நிலயை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்வீட்டை பதிவு செய்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close